இந்திய விற்பனையில் மாஸ் காட்டும் எலெக்ட்ரிக் கார்கள் - எந்த மாடல் முதலிடம் தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Jul 4, 2022, 2:09 PM IST

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நெக்சான் EV மாடலை கொண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை பெற்று அசத்தி இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 650-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் வாங்குவோரின் முதல் தேர்வாக நெக்சான் EV இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: 160 கி.மீ. ரேன்ஜ், மூன்று ரைடிங் மோட்கள்... வேற லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..!

Tap to resize

Latest Videos

நெக்சான் EV, நெக்சான் EV மேக்ஸ் மற்றும் டிகோர் EV சப் காம்பேக்ட் செடான் மாடல்களை கொண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 70 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. கடந்த மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களில் நெக்சான் EV மற்றும் டிகோர் EV இடம்பெற்று உள்ளன. கடந்த ஜூன் மாதம் இந்திய சந்தையில் அதிக விற்பனையான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். 

இதையும் படியுங்கள்: மீண்டும் விலை உயர்வு... வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த டொயோட்டா...!

டாடா நெக்சான் EV:

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நெக்சான் EV மாடலை கொண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  கடந்த மாதம் மட்டும் 650 நெக்சான் EV மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையை விட 33 சதவீதம் அதிகம் ஆகும். மாதாதந்திர விற்பனையில் நெக்சான் EV சிறப்பான வளர்ச்சியை கடந்த ஜூன் மாதத்தில் பதிவு செய்து இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்... டி.வி.எஸ். ரோனின் இப்படி தான் இருக்குமாம்...!

எம்ஜி ZS EV:

இந்திய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டவாது இடத்தில் உள்ளது. எம்ஜி நிறுவனத்தின் புதிய தலைமுறை ZS EV மாடல் மட்டும் கடந்த மாதம் 250-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 145 சதவீதம் அதிகம் ஆகும். இந்திய சந்தையில் 2022 எம்ஜி ZS EV விலை ரூ. 21 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

டாடா டிகோர் EV:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் EV மாடல் நெக்சான் அளவுக்கு அதிக யூனிட்கள் விற்பனையாகவில்லை. கடந்த மாதம் முழுக்க வெறும் எட்டு யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 13 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்:

இந்திய சந்தையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலாக ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் இருக்கிறது. இந்த மாடல் ஜூன் மாதத்தில் ஏழே யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

click me!