ஜெர்மனியில் தயாராகும் டெஸ்லா கார்கள்! அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனை ஆரம்பம்!

By SG BalanFirst Published Apr 4, 2024, 8:51 PM IST
Highlights

உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் டெஸ்லா விரைவில் களமிறங்க இருக்கிறது என்பதை இது உறுதி செய்கிறது. இதற்காக சுமார் 2 பில்லியன் டாலர் பணத்தை டெஸ்லா முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் கார் உற்பத்தி தொடங்கியுள்ளது என டெஸ்லா நிறுவனத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் டெஸ்லா கார்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் டெஸ்லா விரைவில் களமிறங்க இருக்கிறது என்பதை இது உறுதி செய்கிறது. இதற்காக சுமார் 2 பில்லியன் டாலர் பணத்தை டெஸ்லா முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்குப் பொருத்தமான தளங்களை ஆய்வு செய்வதற்காக டெஸ்லாவின் குழு இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வரவுள்ளது என்று தகவல் வெளியான நிலையில் ஜெர்மனியில் டெஸ்லா கார் உற்பத்தி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லோன் எடுத்து கார் வாங்கப் போறீங்களா? என்னென்ன செலவு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு முடிவு பண்ணுங்க!

இந்தியா கடந்த மாதம் சில எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களின் இறக்குமதி வரியைக் குறைக்க முன்வந்துள்ளது. இந்தியாவில் குறைந்தபட்சம் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தியைத் தொடங்கினால், வரி குறைப்பு செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

டெஸ்லா நிறுவனம் பல மாதங்களாக இந்தியாவின் இறக்குமதி வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் மத்திய அரசு இந்த சலுகையைக் கொடுக்க முடிவு செய்துள்ளது. உள்ளூர் கார் தயாரிப்பாளர்களும் இதே எதிர்ப்பைக் கொண்டிருப்பதும் அரசின் முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

டெஸ்லா எந்த மாடலை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. ஜெர்மனியின் பெர்லினுக்கு அருகிலுள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையில் இபோபது மாடல் Yமட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் விற்பதற்காகத் தயாராகும் கார்கள் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக்கான ரைட் ஹேண்ட் டிரைவ் கார்களாக இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.

இந்தியாவின் புதிய கொள்கையின்படி, வாகன உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வரி விகிதத்தில் ஆண்டுக்கு 8,000 கார்களை வரை இறக்குமதி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் டெஸ்லா தொழிற்சாலை... விரைவில் ஆய்வு செய்ய வருகிறது எலான் மஸ்க் குழு!

click me!