தமிழ்நாட்டில் டெஸ்லா தொழிற்சாலை... விரைவில் ஆய்வு செய்ய வருகிறது எலான் மஸ்க் குழு!

By SG BalanFirst Published Apr 4, 2024, 1:42 AM IST
Highlights

டெஸ்லா இந்தியாவில் புதிய ஆலையைத் தொடங்கியதும் முதலில் 30 ஆயிரம் டாலருக்கு உட்பட்ட குறைந்த விலையில் சிறிய ரக காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்ய ஒரு சிறப்பு குழுவை இம்மாதம் இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் புதிய மின்சார வாகன கொள்கைக்கு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தக் கொள்கை டெஸ்லாவுக்கு சாதகமான அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே திட்டமிட்ட மெக்சிகோ ஆலை திட்டம் கேள்விக்குறியாக இருப்பதால், இப்போது கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியாவில் நுழைய டெஸ்லா திட்டமிடுவதாகத் தெரிகிறது.

இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவிலிருந்து டெஸ்லா நிறுவனதிதன் குழு ஒன்று ஏப்ரல் மாத இறுதியில் வரவுள்ளது எனச் சொல்லப்படுகிறது. நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றில் தொழிற்சாலை ஆமைக்க வாய்ப்பு இருக்கிறதுக் கூறப்படுகிறது.

ஹைபிரிட் வாகனங்களுக்கு ஜிஎஸ்ரி வரி குறைப்பு! அமைச்சர் நிதின் கட்காரி கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

டெஸ்லா குழு முதல் கட்டமாக மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் ஆய்வு செய்யும் எனவும் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு செய்வார்கள் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியா வருகையின்போது தொழிற்சாலை அமைக்க சாதகமான இடம் மற்றும் ஏற்றுமதி உள்ள வசதிகள் குறித்து இந்த மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாவும் தெரிகிறது.

துறைமுகங்கள் கொண்ட கடற்கரை ஓர மாநிலங்களாக இருப்பதால்தான் இவற்றை டெஸ்லா தேர்ந்தெடுத்துள்ளது என்று இதுபற்றி விவரம் அறிந்தவர்கள் கணிக்கின்றனர். பிற தெற்காசிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றமதி செய்யும் மையமாக அந்த புதிய ஆலையை அமைக்க டெஸ்லா திட்டமிடுகிறது என்று வல்லுநர்கள் சொல்கின்றனர்.

டெஸ்லா இந்தியாவில் புதிய ஆலையைத் தொடங்கியதும் முதலில் 30 ஆயிரம் டாலருக்கு உட்பட்ட குறைந்த விலையில் சிறிய ரக காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் சொல்கிறார்கள். டெஸ்லா நிறுவனத்தின் வழக்கமான எலைட் காராக இல்லாமல், பட்ஜெட் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் கார் மாடலுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, பிற்காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வரும் டெஸ்லா மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்பதால் ஆட்டோமொபைல் துறையில் டெஸ்லாவின் வருகை ஆவலுடன் உற்றுநோக்கப்படுகிறது.

பொலேரோவை தானியங்கி காராக மாற்றிய ஸ்டார்ட்அப் நிறுவனம்! வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ரியாக்‌ஷன்!

click me!