
டாடா மோட்டார்ஸ் தனது சியாரா மாடலை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன வடிவில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. 1991-ல் வெளியான பழைய சியாரா மூன்று-கதவு வடிவமைப்பு மற்றும் 'கிளாஸ்-பேக்' பின்புறம் புகழ்பெற்றது. மீண்டும் வந்துள்ள புதிய சியரா, அந்த கிளாசிக் அடையாளத்தை நவீன எஸ்யூவி வடிவில் புத்துயிர் பெற்றுள்ளது. இதே நேரத்தில், டாடாவின் மற்ற மாடலான கர்வும் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு எழும் முக்கிய கேள்வி — "சியராவா? கர்வ்வா? இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
சியாரா: பாரம்பரிய தோற்றமும் வலிமை கொண்ட SUV
புதிய சியரா, முந்தைய தலைமுறையின் வடிவமைப்பு சாராம்சத்தை தக்கவைத்தபடியே, பெரிய மற்றும் வலுவான எஸ்யூவி தோற்றத்துடன் உள்ளது.
நகருக்கு வெளியிலும், கடினமான சாலைகளிலும் சாதுவாக செயல்படும் வலிமை கொண்ட பாரம்பரிய எஸ்யூவியை விரும்புவோருக்கு சியாரா சிறந்த தேர்வு.
கர்வ்: நவீன வடிவமைப்பு
டாடா கர்வ் முற்றிலும் நவநாகரீகமான கூபே-ஸ்டைல் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபலமான கிரெட்டா, செல்டோஸ் போன்றவை மாடல்களை விரும்புவோர், ஆனால் இன்னும் ஸ்டைலான ஒன்றை எதிர்பார்ப்போர் கர்வை தேர்வு செய்கிறார்கள்.
சியாரா யாருக்காக?
கர்வ் யாருக்காக?
முக்கிய வேறுபாடுகள்
கர்வ் – வடிவமைப்பு, ஸ்டைல் மற்றும் நவீனத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது.
சியரா – வலிமை, பாரம்பரியம், எஸ்யூவி தன்மையை பிரதிபலிக்கிறது.