கார் லோனுக்கு எந்த வங்கி பெஸ்ட்? குறைந்த வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் பட்டியல் இதோ

Published : Nov 19, 2025, 10:30 AM IST
Car Loans

சுருக்கம்

புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்காக, பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகளின் கார் லோன் வட்டி விகிதங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன.

இன்றைக்கு புதிய கார் வாங்குவதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினாலும், இஎம்ஐ மற்றும் வட்டி விகிதம் காரணமாக பலர் முடிவெடுக்க முடியாது இருப்பார்கள். குறிப்பாக 10 லட்சம் வரை லோன் எடுக்க நினைப்பவர்களுக்கு, 5 வருட காலத்திற்கு கிடைக்கும் வட்டி விகிதம் மிகவும் முக்கியமானது. ஆனால் சந்தோஷமான செய்தி என்னவென்றால் பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தற்போது மிகக் குறைந்த வட்டியில் கார் லோன் வழங்கி வருகின்றன.

தற்போது கிடைக்கும் மிகக் குறைந்த வட்டி

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB). இங்கு கார் லோன் வட்டி 7.85% முதல் துவங்குகிறது. 10 லட்சம் ரூபாய் கார் லோனுக்கு, 5 வருட கால மாத இஎம்ஐ வெறும் ரூ.20,205. இவ்வளவு குறைந்த வட்டியில் கார் லோன் வழங்கும் வங்கி தற்போது PNB மட்டுமே. அதனால் முதல் முறை வாங்குபவர்களுக்கு இது ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்.

யூனியன் வங்கி, IDBI, Bank of Baroda

PNB-க்கு அடுத்தபடியாக யூனியன் பேங்க் 7.90% வட்டியில் லோன் வழங்குகிறது. இதே லோன் காலத்திற்கான இஎம்ஐ ரூ.20,229 ஆகும். ஐடிபிஐ வங்கி 7.95% வட்டியில் கடன் துவங்குகிறது; இஎம்ஐ ரூ.20,252. பேங்க் ஆஃப் பரோடா 8.15% வட்டியில் லோன் தரும். அதன் இஎம்ஐ ரூ.20,348. இவை அனைத்தும் அரசு வங்கிகள் என்பதால் process charges குறைவு, documentation சுலபம் ஆகும்.

SBI மற்றும் கனரா வங்கி

நாட்டின் மிகப் பெரிய வங்கியான SBI, 8.75% வட்டியில் கார் லோன் வழங்குகிறது. இஎம்ஐ சுமார் ரூ.20,638. கனரா வங்கி 8.20% வட்டியில் இஎம்ஐ ரூ.20,372 ஆகும். இவை வட்டி வாரியாக கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், சேவை மற்றும் பாதுகாப்பு காரணமாக பலர் இவ்வங்கிகளை தேர்வு செய்கிறார்கள்.

தனியார் வங்கிகள்

ஆக்சிஸ் வங்கியில் வட்டி 8.80% (இஎம்ஐ ரூ.20,661), HDFC வங்கியில் 9.40% (இஎம்ஐ ரூ.20,953). அதிக வட்டியுடன் பட்டியலில் கடைசியாக IDFC First Bank உள்ளது 9.99% வட்டி, இஎம்ஐ ரூ.21,242. தனியார் வங்கிகளில் செயல்முறை வேகம் அதிகம், ஆனால் வட்டி கிட்டத்தட்ட 1% வரை கூட அதிகமாக இருக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1.76 லட்சம் தள்ளுபடியில் ஹோண்டா எலிவேட்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி.!
ரூ.85,000 வரை சேமிக்கலாம்.. ரூ.6 லட்சத்திற்குள் ஹூண்டாய் காரை வாங்கலாம்.!