
இந்திய எஸ்யூவி சந்தையில் தங்களது நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கியா இந்தியா பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் மலிவு விலை எலக்ட்ரிக் வாகனங்கள் (EVs), ஹைப்ரிட் கார்கள், மற்றும் ஒரு சி-செக்மென்ட் எஸ்யூவி ஆகியவை அடங்கும். இந்த புதிய மாடல்கள் அனைத்தும் 2028-க்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
விரைவில் இரண்டு பெரிய அறிமுகங்கள்
தற்போது கியா இரண்டு முக்கிய வெளியீடுகளுக்குத் தயாராகி வருகிறது. அதாவது புதிய தலைமுறை கியா செல்டோஸ் (Seltos) மற்றும் கியா சைரோஸ் இவி (Syros EV) ஆகும். இதில், புதிய செல்டோஸ் 2025 டிசம்பர் மாதத்தின் முதல் வாரங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியான தேதி இன்று அறிவிக்கப்படவில்லை.
2026-ல் கியா சைரோஸ் இவி அறிமுகம்
கியா சைரோஸ் இவி இந்தியாவில் 2026 முதல் காலாண்டில் (ஜனவரி–மார்ச்) ஷோரூம்களுக்கு வரலாம். இது கியாவின் இரண்டாவது மலிவு விலை எலக்ட்ரிக் எஸ்யூவியாக இருக்கும். தற்போது EV சந்தையில் கியாவின் முதல் முயற்சி EV9 மற்றும் கரன்ஸ் EV ஆகியவற்றில் வெற்றியடைந்த நிலையில், சைரோஸ் இவி மேலும் பெரிய மார்க்கெட்டைக் குறிவைக்கிறது.
புதிய தலைமுறை கியா செல்டோஸ்
புதிய கியா செல்டோஸ் ஏற்கனவே சோதனை கட்டத்தில் உள்ளது. கியாவின் பிரபலமான ‘Opposites United’ டிசைன் மொழி இதில் இடம்பெறும். இதில் புதிய கிரில் டிசைன், மாடர்ன் ஹெட்லெம்ப்கள், ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள், மற்றும் பின்புற இணைக்கப்பட்ட LED லைட் ஸ்ட்ரிப் ஆகியவை இடம்பெறும். இந்த புதிய டிசைன், EV9 மற்றும் சைரோஸ் மாடல்களின் தாக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
உட்புறத்தில் கியா பல மேம்பாடுகளை செய்துள்ளது. புதிய அப்ஹோல்ஸ்டரி, சீட் கவர் டிசைன், மற்றும் அதிகப்படியான டிஜிட்டல் அம்சங்கள் சேர்க்கப்படலாம். பயணிகளுக்கான வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் மேலும் வலுப்படுத்தப்படும்.
என்ஜின் மற்றும் செயல்திறன்
புதிய செல்டோஸ் மாடலில் என்ஜின் அமைப்பில் மாற்றமில்லை. இதில் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்கள் தொடரும். கூடுதலாக, நிறுவனம் 2027-ல் ஹைப்ரிட் பதிப்பையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இது எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கும்.
கியாவின் மலிவு விலை எலக்ட்ரிக் எஸ்யூவி
சைரோஸ் இவி அதன் பாக்ஸி வடிவத்தைக் தக்கவைத்துக் கொள்ளும், ஆனால் EV மாடலுக்கே உரிய தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் வரும். ஸ்பை படங்களின் படி, வலது முன்புற ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட் இடம் பெற்றுள்ளது. உட்புறத்தில் பெட்ரோல் மாடலின் அதே கேபின் அமைப்பு, சில புதிய டிஜிட்டல் அம்சங்களும் வழங்கப்படலாம். இதனால், சைரோஸ் இவி இந்தியாவில் கியாவின் மிகவும் அணுகத்தக்க EV எஸ்யூவி ஆக மாறும் வாய்ப்பு அதிகம்.