ஓசூர் கலக்குது.. அக்டோபரில் 1,050 யூனிட் விற்பனை – Simple Energy வரலாற்றுச் சாதனை

Published : Nov 07, 2025, 03:25 PM IST
Simple Energy

சுருக்கம்

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அக்டோபர் 2025-ல் 1,050 மின்சார ஸ்கூட்டர்களை விற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது, இது கடந்த நிதியாண்டின் மொத்த வருமானத்தை விட 125% அதிகம்.

தமிழகத்தின் ஓசூரில் உள்ள தங்களது உற்பத்தி நிலையத்தில் Simple Energy நிறுவனம் பெரும் வளர்ச்சியை பதிவு செய்தார். 2025 அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,050 யூனிட் மின்சார ஸ்கூட்டர்கள் விற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் மொத்த வருமானத்தை விட 125% அதிகமான சாதனை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாத விற்பனையில் வாகன் போர்டல் (Vahan Portal) வழியாக 974 யூனிட்களும், தெலங்கானாவில் 76 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் Simple Energy தனது வரலாற்றிலேயே மிகச்சிறந்த மாதாந்திர விற்பனையைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நிறுவனத்தின் புதிய மாடல்கள் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை என்று கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, நிறுவனம் தனது ஓசூர் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி திறன் 40% உயர்த்தியுள்ளது. சுமார் 2 லட்சம் சதுர அடியில் பரவியுள்ள இந்த தொழிற்சாலையில், தொழிலாளர் எண்ணிக்கை மற்றும் மார்க்கெட்டிங் குழுவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நிறுவனத்தில் 40க்கும் மேற்பட்ட மார்க்கெட்டிங் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.

Simple Energy-யின் விற்பனை வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் – Simple ONE Gen 1.5 மற்றும் Simple OneS ஆகும். இந்த மாடல்கள் 2025 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் Simple ONE Gen 1.5-க்கு IDC ரேஞ்ச் 248 கிமீ, Simple OneS மாடலுக்கு 181 கிமீ ரேஞ்ச் உள்ளது. இந்த நீண்ட ரேஞ்ச் திறனே வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

தற்போது Simple Energy இந்தியாவின் பல மாநிலங்களில் 61 விற்பனை மையங்களை இயக்குகிறது. அடுத்த கட்டமாக டெல்லி, போபால், பட்னா, ராஞ்சி, புவனேஸ்வர் போன்ற நகரங்களிலும் விரைவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் வட மற்றும் கிழக்கு பகுதிகளில் தங்கள் இருப்பை வலுப்படுத்தும் நிறுவனம் கொண்டுள்ளது.

மேலும், புதிய குடும்பத்திற்கேற்ற மாடல் ஒன்றையும் நிறுவனம் உருவாக்கி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் பரந்த இருக்கை, பெரிய ஸ்டோரேஜ் மற்றும் பாரம்பரிய வடிவமைப்பு இடம்பெறும் என வசதி உள்ளது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மொத்தத்தில், Simple Energy தனது வளர்ச்சிப் பாதையில் வலுவாக முன்னேறி வரும் மின்சார வாகன நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மஹிந்திரா XEV 9e-க்கு ரூ.3.8 லட்சம் வரை தள்ளுபடி – டிசம்பர் பம்பர் ஆஃபர்!
9 மாருதி கார்கள் மீது பம்பர் தள்ளுபடி.. புதிய கார் வாங்க இதுதான் சரியான நேரம்.!