குறைந்த விலையிலேயே ADAS வசதி கொண்ட பட்ஜெட் கார்கள்.. டாடா முதல் ஹோண்டா வரை.. லிஸ்ட் இங்கே

Published : Nov 19, 2025, 04:24 PM IST
ADAS Cars

சுருக்கம்

சாலைப் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறும் இக்காலத்தில், ADAS தொழில்நுட்பம் அத்தியாவசியமாகிவிட்டது. இந்த அம்சம் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுகிறது. குறைந்த விலையில் ADAS வசதி கொண்ட பட்ஜெட் கார்களை காணலாம்.

சாலைப் பாதுகாப்பு பற்றி மக்கள் அதிகம் கவலைப்படத் தொடங்கியுள்ள நிலையில், ADAS (மேம்பட்ட ஓட்டுனர் உதவி அமைப்பு) தொழில்நுட்பம் இன்று ஒரு “ஆடம்பர அம்சம்” இல்லை ஒரு “அத்தியாவசிய பாதுகாப்பு அம்சம்” ஆக மாறியுள்ளது. பிரேக்கிங், ஸ்டீயரிங், லேன் உதவி, மோதல் எச்சரிக்கை போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் நிலை 2 ADAS வழங்குகிறது. இந்தியாவில் இந்த அம்சம் அதிகமாக பிரீமியம் கார்களில் கிடைத்தாலும், தற்போது சில இடைப்பட்ட மாடல்கள் கூட இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம்-ஐ வழங்கத் தொடங்கியுள்ளன.

10 லட்சத்திற்குள் கிடைக்கும் ஒரே Level 2 ADAS sedan

Honda Amaze ZX variant-ல் Level 2 ADAS வசதி வழங்கப்படுகிறது. ZX வேரியண்ட் விலை ரூ.9.14 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அம்சங்கள் உள்ளன. காம்பாக்ட் செடான் வகையில் இது மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்று.

டாடா நெக்ஸான்

Tata Nexon-ன் Fearless Plus S variant-ல் Level 2 ADAS ஆதரவு செய்யப்படுகிறது. இந்த வேரியண்ட் ரூ.12.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் துவங்குகிறது. 1.2லி டர்போ பெட்ரோல் எஞ்சின், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், 360° கேமரா, பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல் போன்ற பாதுகாப்பு மற்றும் வசதி இரண்டும் சேர்ந்து கிடைக்கும்.

சிறிய SUV-கு பெரிய பாதுகாப்பு

மஹிந்திரா-வின் புதிய XUV 3XO சப்காம்பாக்ட் SUV-யில் AX5L மற்றும் AX7L வேரியண்ட்களில் அளவுக்கு மீறிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ADAS நிலை 2 ஆதரவு, அடாப்டிவ் க்ரூஸ், லேன் புறப்படும் எச்சரிக்கை, போக்குவரத்து உதவி ஆகியவை உள்ளன. விலை ரூ.12.17 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை.

அனைத்து variants-லும் ADAS

செடான் category-ல் Honda City safety tech-க்கு பெயர் பெற்றது. அடிப்படை வேரியண்ட் தவிர மற்ற அனைத்து வகைகளும்-லும் நிலை 2 ADAS தரப்படுகிறது. விலை ரூ.12.69 லட்சம் - ரூ.16.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). City ADAS அமைப்பு city traffic-க்கும் highway drive-க்கும் மிகவும் smooth-ஆக வேலை செய்கிறது.

வெர்னாவின் அம்சங்கள்

Hyundai Verna-வின் பிரீமியம் SX(O) variant-ல் Level 2 ADAS பேக் முழுமையாக வழங்கப்படுகிறது. விலை ரூ.14.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). நெடுஞ்சாலை உதவி, முன்னோக்கி மோதல் எச்சரிக்கை, லேன் ஃபாலோ அசிஸ்ட் Verna-I mid-range-ல் மிக முன்னேறிய காராக மாற்றப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மஹிந்திரா XEV 9e-க்கு ரூ.3.8 லட்சம் வரை தள்ளுபடி – டிசம்பர் பம்பர் ஆஃபர்!
9 மாருதி கார்கள் மீது பம்பர் தள்ளுபடி.. புதிய கார் வாங்க இதுதான் சரியான நேரம்.!