Royal Enfield : இரு சக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ராயல் என்ஃபீல்டு, விரைவில் இந்தியாவில் தனது சிறந்த பைக்குகளை வெளியிடவுள்ளது.
பிரபல ராயல் என்பீல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் பல பிரிவுகளில் புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் 6 மோட்டார் சைக்கிள்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த பைக்குகள் நடப்பு நிதியாண்டில் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
பிரபல ஆட்டோகார் நிறுவனம் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, ராயல் என்ஃபீல்டு 6 மாடல்களை வரிசைப்படுத்தியுள்ளது. அவற்றில் நான்கு 350cc, 440cc மற்றும் 450cc ஆகிய ccகளுக்கு கீழ் உள்ள மாடல் பைக்குகளாக அறிமுகப்படுத்தப்படும் என்றும், மீதமுள்ளவை 450cc முதல் 650cc கீழ் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
350cc செக்மென்ட்டைப் பற்றி பேசுகையில், RE நிறுவனம் ஒரு கிளாசிக் பைக் ஒன்றைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ரெட்ரோ-ஸ்டைல் பாப்பரை (bobber) வெளியிடும் என்றும் மற்றும் அது 350ccஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 440cc மற்றும் 450cc ஆகிய இடங்களை ஸ்க்ராம் 440 மற்றும் கெரில்லா 450 எடுத்துக் கொள்ளும். முந்தையது Scram 411 இலிருந்து பெறப்பட்ட 440cc இன்ஜினைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மத்தியில், RE நிறுவனம் 650சிசிக்கு கீழ் இரண்டு புதிய பைக்குகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. முதல் மாடல் இன்டர்செப்டர் பியர் 650 ஆக இருக்கும் என்று அறிக்கைகள் பரிந்துரைக்கின்றன, மேலும் சில வலுவான ஆஃப்-ரோடு திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மற்றொன்று கிளாசிக் 650 ஆகும், இது பல நிலப்பரப்புகளில் வாடிக்கையாளர்களுக்கு மென்மையான சவாரி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.69,999 முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்.. அலப்பறை கிளப்பும் ஓலா.. ஆர்டர்கள் குவியுது..