Bajaj Pulsar F250 : அண்மையில் தனது pulsar N250 என்ற வாகனத்தின் தகவல்களை வெளியிட்ட பஜாஜ் நிறுவனம், இப்பொது அதன் F250 என்ற பைக்கின் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியிட்டு வருகின்றது. விரைவில் இந்த வண்டி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்சர் தனது புதிய எஃப்250 எப்பொழுதும் பல்சர் நிறுவனத்தின் N250 அம்சங்களை சற்று மேம்படுத்தும் வகையில் தான் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.பஜாஜ் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ஃபைட்டர் பிரிவில் அதன் மீது பெரிய ஈர்ப்பு காரணமாக, தனது N250 மடலை வெளியிட்ட பிறகு தான் தனது F250 பைக்கை வெளியிடும் என்று பஜாஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2024 பல்சர் N250 இல் நாம் பார்த்ததைப் போலவே பல்சர் F250 புதிய வண்ணங்களையும் கிராபிக்ஸ்களையும் பெறும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், அதே 37மிமீ USD ஃபோர்க் மற்றும் 140-பிரிவு பின்புற டயர் ஆகியவை பைக்கிற்கு அதிக கவர்ச்சியை சேர்கின்றது. 2024 பல்சர் F250 ஆனது புளூடூத் இணைப்பு மற்றும் புதிய டிஜிட்டல் டிஸ்ப்ளே, இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் ஏபிஎஸ் முறைகள் இதில் அடங்கும்.
இது 8,750ஆர்பிஎம்மில் 24.1பிஎச்பி ஆற்றலையும், 6,500ஆர்பிஎம்மில் 21.5என்எம் ஆற்றலையும் வழங்கும் அதே 249சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சினையும் பெறும். இது ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் பல்சர் F250, Suzuki Gixxer SF250க்கு எதிராக செல்கிறது. அதன் விலையைப் பொறுத்தவரை, பல்சர் N250 ஐ விட சில ஆயிரங்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் இந்த பல்சர் F250, 1.75 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பஜாஜ் பல்சர் நிறுவனத்தின் N250 பைக் 1.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்..100 கிமீ ரேஞ்ச்.. விலை எவ்வளவு தெரியுமா?