Maruti Swift விரும்பிகளுக்கு குட் நியூஸ்.. அம்சமான Z சீரிஸ் என்ஜினுடன் புது கார் - எப்போது அறிமுகமாகும்?

By Ansgar RFirst Published Apr 15, 2024, 3:06 PM IST
Highlights

New Maruti Swift : மாருதி கடந்த ஆண்டு தனது புதிய ஸ்விஃப்ட்டை சர்வதேச அளவில் காட்சிப்படுத்தியது, மேலும் இந்த புதிய ஸ்விஃப்ட் கார் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்பதை இப்போது உறுதியாகியுள்ளது.

இந்த புது ஸ்விஃப்ட் இந்த ஆண்டு மாருதியின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும், மேலும் அதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் அனைத்து புதிய Maruthi Swift Desire காம்பாக்ட் செடானும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களை பொறுத்தவரை Swift கார் பலராலும் விரும்பப்படும் ஒரு கார் ஆகும். 

இந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் சற்று வித்தியாசமாக தோற்றமளிக்கும் முன் மற்றும் பின்புற பம்பர்களைப் பெறும் என்று சில இணையவழி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் கார்களை போலவே இதில் அலாய் வீல் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்..100 கிமீ ரேஞ்ச்.. விலை எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே ஸ்விப்ட் காரில் இருந்த K சீரிஸ் 1.2-லிட்டர், நான்கு-சிலிண்டர் பெட்ரோல் பவ்பிளாண்ட், கடந்த ஆண்டு ஜப்பானில் ஸ்விஃப்ட்டில் அறிமுகமான புதிய Z சீரிஸ் 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் எஞ்சின் மூலம் மாற்றப்படும். இந்த எஞ்சின் உமிழ்வு, செயல்திறன் மற்றும் வெளியீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆகவே குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களைப் பெறும். 

புதிய Z சீரிஸ் பொருத்தப்பட்ட ஸ்விஃப்ட்டின் வெளியீடு வெளிச்செல்லும் K12 இன்ஜினைப் போலவே இருக்கும் என்று எங்களிடம் கூறப்பட்டுள்ளது. இது 90hp மற்றும் 113Nm ஐ வெளிப்படுத்தும், மேலும் Mild-Hybird தொழில்நுட்பத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்விஃப்ட் டிரான்ஸ்மிஷன்களை பொறுத்தவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

ஆனால் மாருதி 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம், இது இந்திய சூழலுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த வண்டியின் துவக்க விலை சுமார் 6.7 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளசுகள் விரும்பும் Bajaj Pulsar.. விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் Pulsar F250 - என்ன விலை இருக்கும்?

click me!