விற்பனையில் பட்டைய கிளப்பும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! மார்ச் மாதம் டாப் கிளாஸ் சேல்ஸ்!

By SG Balan  |  First Published Apr 2, 2024, 1:37 AM IST

மார்ச் 2024 இல் 53,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து ஓலா எலெக்ட்ரிக் இதுவரை இல்லாத ஒரு புதிய விற்பனை சாதனையைப் படைத்துள்ளது.


மார்ச் 2024 இல் 53,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) தனக்கென ஒரு புதிய விற்பனை சாதனையைப் படைத்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் புகழைப் பெற்றுள்ளன. இ-ஸ்கூட்டர் பிரிவில் ஆரம்பம் முதலே களமிறங்கி கொடிக்கட்டிப் பறக்கும் நிறுவனமாகவும் உள்ளது.

Tap to resize

Latest Videos

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை எண்ணிக்கையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், 2024 மார்ச் மாதம் நிறுவனத்திற்கு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது.

சமீபத்திய வளர்ச்சியில், ஓலா எலக்ட்ரிக் கடந்த மாதம் 53,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்று, தொடர்ந்து ஐந்தாவது மாதமாக புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மார்ச் 2024 இல் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர விற்பனையும் எட்டியுள்ளது.

எல்லாருமே எலக்ட்ரிக் கார் வாங்கலாம்! கம்மி விலையில் களமிறங்கும் மாருதி சுசுகி eVX!

ஓலா எலக்ட்ரிக் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஓலா எலக்ட்ரிக் கடந்த நிதியாண்டின் மொத்த விற்பனையையும் முந்திவிட்டது. முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் மொத்த விற்பனை 1,52,741 ஆக இருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை 3,28,785 ஆக உயர்ந்து, 115% ஆண்டு வளர்ச்சி அடைந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் சந்தையில் மின்சார வாகனங்கள் 30% இடத்தைப் பிடித்துள்ளன. இது ஒரு நல்ல எல்லா மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கும் நல்ல அறிகுறியாக உள்ளது. 2024 மார்ச் மாதத்தில் மொத்த இரு சக்கர வாகன விற்பனையில் எலெக்ரிக் ஸ்கூட்டர் விற்பனை 9% ஆக உள்ளது. அதே நேரத்தில் மார்ச் 2024 இல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முதல் இடத்தையும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பெற்றுள்ளது.

இது தவிர, முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை 42% வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த காலாண்டில் 84,133 யூனிட்களை விற்பனை செய்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சமீபத்திய காலாண்டில் 1,19,310 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் தற்போது S1 Pro, S1 Air மற்றும் S1X+ என்ற 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனையில் வைத்திருக்கிறது. ப்ரீமியம் மாடலான ஓலா எஸ்1 ப்ரோ ரூ. 1.3 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும் என்ட்ரி லெவல் மாடல் ரூ. 85,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும் கிடைக்கிறது.

அரச குடும்பத்தில் மருமகனாகப் போகும் சித்தார்த்! அதிதியுடன் காதல் மலர்ந்த கதை இதுதான்!

click me!