புதுமையான வசதிகளுடன் வரவுள்ள மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டிற்குள் இந்த கார் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகியின் முதல் மின்சார வாகனம் 2025ஆம் ஆண்டில் வெளியிடப்பட உள்ளது. இது கார் தயாரிப்பாளரின் கார் விற்பனை நிலையமான நெக்ஸா மூலம் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
eVX என்ற இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார வாகனங்களில் ஒன்றாகும். மேலும் இந்த மாத தொடக்கத்தில் eVX எலக்ட்ரிக் எஸ்யூவியின் வீடியோ யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது.
இது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 550 கிமீ தூரம் வரை செல்லும். 50 kWh பேட்டரி கொண்ட இந்த காரை ஜப்பானில் உள்ள சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் வடிவமைத்துள்ளது.
eVX முதலில் 2023 ஆட்டோ எக்ஸ்போவின் போது காட்சிப்படுத்தப்பட்டது. பிறகு 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவிலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. பல முறை eVX எஸ்யூவி தெருக்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
மிக சமீபத்தில், மாருதி சுஸுகி eVX சோதனையின் வீடியோ யூடியூப்பில் ரோலிங் கார்ஸ் சேனலில் வெளியானது. இந்தப் புதிய வீடியோ மூலம் சில சுவாரஸ்யமான புதிய வசதிகளுடன் இந்த SUV காரை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.
முன் இடது ஃபெண்டரில் EVக்கான சார்ஜிங் போர்ட் உள்ளது. ADAS அமைப்பு, 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன. உட்புறத்தில், ஒரு பெரிய ஃப்ரீ-ஸ்டாண்டிங் டிஸ்ப்ளே உள்ளது. இது டிரைவரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இரண்டையும் உள்ளடக்கியது. உட்புற அம்சங்கள் பற்றி இதுவரை நிறைய விவரங்கள் வெளிவரவில்லை
பல்வேறு புதுமையான வசதிகளுடன் வரவுள்ள மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டிற்குள் இந்த கார் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.