நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது அபராதம் செலுத்துவதையும் இரு மடங்கு சுங்கக் கட்டணங்கள் செலுத்துவதையும் தவிர்க்க இந்த மாற்றத்தைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கிய Fastag பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. பேடிஎம் Fastag பயனர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்கு முன் மற்றொரு வங்கியால் வழங்கப்படும் புதிய Fastag ஐப் பெற்றுக்கொள்ளுமாறு நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது அபராதம் செலுத்துவதையும் இரு மடங்கு சுங்கக் கட்டணங்கள் செலுத்துவதையும் தவிர்க்க இந்த மாற்றத்தைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள தடை காரணமாக நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்தப் புதிய ஆலோசனை வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர் மார்ச் 15க்குப் பிறகு பேடிஎம் பேமெண்ட் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆர்பிஐ உத்தரவுகளுக்கு இணங்க, அங்கீகரிக்கப்பட்ட Fastag வழங்கும் பிற வங்கிகளில் இருந்து ஃபாஸ்டேக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கி காலக்கெடுவுக்கு முன் புதிய கணக்கைப் பெற வேண்டும் என்றும் நெடுஞ்சாலை ஆணையம் தெளிவுபடுத்தியது.
ஆனால், பேலன்ஸ் தொகை இருந்தால் அந்தப் பணத்தைத் திரும்பப் பெறவும் கேட்கலாம். பயனர்கள் தங்கள் பேடிஎம் வங்கிக் கணக்கில் எஞ்சி இருக்கும் Fastag பேலன்ஸை மட்டும் பணம் செலுத்த பயன்படுத்தலாம். இந்நிலையில், பேடிஎம் பேமெண்ட் வங்கி பயனர்களுக்கு மாற்றாக 32 வங்கிகள் Fastag வழங்குநர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றுக்கு பேடிஎம் பயனர்கள் மாறிக்கொள்ளலாம்.
Fastag வழங்குநர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 32 வங்கிகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Bank Name |
Official URL |
Airtel Payments Bank |
|
AU Small Finance Bank |
|
Axis |
|
Bank of Maharashtra |
|
Canara Bank |
|
Central Bank of India |
|
Equitas Small Finance Bank |
|
Federal Bank |
|
FINO Payments Bank |
|
HDFC |
|
IDBI Bank |
|
IDFC First Bank |
|
IndusInd Bank |
|
Kotak Mahindra Bank |
|
Nagpur Nagarik Sahakari Bank |
|
Saraswat Co-operative Bank |
|
South Indian Bank |
|
State Bank of India |
|
UCO Bank |
|
Union Bank of India |
|
Indian Overseas Bank |
|
Yes Bank Ltd |
|
Indian Bank |