இம்மாதம் முதல் துவங்கும் விற்பனை.. விறுவிறுப்பான விற்பனையில் Aprilia RS 457 - விலை மற்றும் ஸ்பெக் இதோ!

Ansgar R |  
Published : Mar 14, 2024, 03:57 PM IST
இம்மாதம் முதல் துவங்கும் விற்பனை.. விறுவிறுப்பான விற்பனையில் Aprilia RS 457 - விலை மற்றும் ஸ்பெக் இதோ!

சுருக்கம்

Aprilia RS 457 : இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள Apirila நிறுவனத்தின் RS 457, ஏற்கனவே புக் செய்த நபர்களுக்கு இம்மாத இறுதி முதல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அளவில் தற்போது, ​சுமார் ​31 டீலர்ஷிப்கள் மூலம் Aprilia RS 457 விற்பனை செய்யப்படுகிறது, அதில் புக் செய்தவர்களுக்கு இந்த மாதம் 100 பைக்குகள் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய Aprilia RS 457 ஆனது 9,400rpmல் 47.6hp மற்றும் 6,700rpmல் 43.5Nm ஆற்றலை உருவாக்கும் திரவ-குளிரூட்டப்பட்ட, 457cc, பேரலல்-ட்வின் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

பிரபல Piaggio நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த Aprilia நிறுவனம்  இந்திய பைக் விரும்பிகள் மத்தியில் நல்ல வரவேற்பை தொடர்ச்சியாக பெற்று வருகின்றது. இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட பைக் என்பதும் இதன் கூடுதல் சிறப்பாகும். பெரிய அளவில் புக்கிங் பெற்றுள்ள நிலையில், இம்மாத இறுதியில் இருந்து 100 பைக்குகள் விற்பனைசெய்யப்படும்.

அதிக மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் பைக்குகள்.. கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த 5 பைக்குகள் இதுதான்..

இந்திய சந்தையில் சுமார் ரூ. 4.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், மகாராஷ்டிரா), Apirila RS 457 விற்பனையாகவுள்ளது என்று கூறப்படுகிறது. இது போலவே இரட்டை சிலிண்டர் கொண்ட போட்டியாளர்களான யமஹா மற்றும் கவாஸாகியை விட விலை மலிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விலை குறைவாக உள்ள அதே நேரத்தில் அதிக அம்சங்களையும் இது கொண்டுள்ளது. 

மூணு கூறியதை போலவே இந்திய அளவில் 31 டீலர்கள் வாயிலாக மட்டுமே இந்த பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே முன்கூட்டியே புக் செய்த நபர்களுக்கு மட்டும் இம்மாத இறுதியில் இது வழங்கப்படும். அதிகபட்சமாக இந்த வாகனம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வண்டியாக உள்ளது.

14 நிமிடத்தில் களவுபோகும் வாகனங்கள்! கொஞ்சம் அசந்தாலும் போச்சு! உஷாரா இருக்கணும்!

PREV
click me!

Recommended Stories

51 சீட்டர் பேருந்து.. பாதுகாப்பு அம்சங்கள் அசத்துது.. கலக்கும் புதிய BharatBenz BB1924 பேருந்து
மாதம் ரூ.10,000 மட்டும் கட்டினால் போதும்.. டாடா நெக்சான் காரை வீட்டுக்கு கொண்டு வரலாம்