டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்பட்டு வருகிறது. சென்னையில் 10.5 சதவீதமும், பெங்களூருவில் 10.2 சதவீதமும் வாகனத் திருட்டுகள் அதிகரித்துள்ளன.
2022ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் வாகனத் திருட்டு இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லி வாகனத் திருட்டு அதிமாக நடக்கும் நகரமாக உள்ளது.
இந்த விவரங்கள் அக்கோ (Acko) நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளன. 2022 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியா முழுவதும் வாகனத் திருட்டு இரு மடங்குக்கு மேல் அதிகரிப்பதை அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. டெல்லியில் இந்தப் போக்கு ஆபத்தான நிலையை அடைந்துள்ளது.
இந்தியாவில் வாகன திருட்டுகள்:
டெல்லியைத் தொடர்ந்து, சென்னை மற்றும் பெங்களூருவில் வாகனத் திருட்டு சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது வாகனத் திருட்டுகள் சென்னையில் 5 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், பெங்களூருவில் 9 சதவீதத்தில் இருந்து 10.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மறுபுறம், ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் வாகனங்கள் திருடப்படுவது குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்! 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்!
வாகனத் திருட்டு அதிகம் நடக்கும் நாள்:
டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்பட்டு வருகிறது. 2023ல் தினமும் சராசரியாக 105 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது டெல்லியில் வாகனத் திருட்டுகள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. இதில் சுவாரஸ்யமான அம்சமாக, செவ்வாய், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் திருட்டு அதிகமாக நடக்கின்றன.
மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த வாகனத் திருட்டுகளில் டெல்லியின் பங்கு குறைந்திருக்கிறது. 2022இல் 56 சதவீதமாக இருந்தது. 2023 இல் 37 சதவீதமாகக் குறைந்துள்ளது. பஜன்புரா, உத்தம் நகர், ஷாஹ்தாரா, பட்பர்கஞ்ச் மற்றும் பதர்பூர் போன்ற பகுதிகளில் வாகனத் திருட்டு அதிகமாக உள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
திருடர்கள் விரும்பும் பிராண்டுகள்!
திருடப்பட்ட ஒட்டுமொத்த வாகனங்களில் 47 சதவிகிதம் மாருதி சுஸுகி கார்கள் உள்ளன. வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் போன்ற மாடல்கள் டெல்லி என்சிஆர் பகுதியில் அதிகம் குறிவைக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டில் பைக் திருட்டுகள் அதிகரித்துள்ளன. ஹீரோ ஸ்பிளெண்டர் அதிகம் திருடப்பட்ட பைக்காக உள்ளது. அதைத் தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆகியவை உள்ளன. குருகிராமில் திருடப்பட்ட இரு சக்கர வாகனங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது ஹீரோ பைக்குகள் தான்.
வாகனத் திருடர்கள் ஸ்விஃப்ட், வேகன் ஆர் மற்றும் ஸ்பிளெண்டர் போன்ற மாடல்களை அதிகமாக குறிவைக்கிறார்கள். இவற்றுக்கு இருக்கும் அதிக டிமாண்ட், அதிக மறுவிற்பனை மதிப்பு மற்றும் எளிதாக உதிரி பாகங்கள் கிடைப்பது ஆகியவை காரணமாக இந்தக் கார்களைத் தூக்குவது திருடர்களுக்கு லாபகரமானதாக இருக்கக்கூடும் என்றும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை விரைவாக விற்றுவிடலாம் என்பதும் ஒரு காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
வாகனத் திருட்டுக்குக் காரணம் என்ன?
டெல்லியில் போதிய அளவு பார்க்கிங் வசதி இல்லாதது, சாலைகளில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான தகராறுகள் ஆகியவை வாகன திருட்டுக்குக் காரணங்களாக உள்ளன. வாகனம் திருடப்பட்டது தெரிந்தால், உடனடியாக காவல்துறை மற்றும் வாகனக் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். தேவையான ஆவணங்களையும் வழங்க வேண்டும்.
வந்தே பாரத் ரயிலில் பாட்டு பாடிய 12 பெண்கள்! தெற்கு ரயில்வேயை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!