
இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனம் மாருதி சுசுகி. தற்போது மாருதி சுசுகி நிறுவனம் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மாருதி சுசுகி தனது கார் மாடல்கள் அனைத்திலும் சராசரியாக 1.1% விலை அதிகரிப்பு செய்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.கடந்த ஆண்டு டிசம்பரில், அதிகரித்து வரும் கார் தயாரிப்பு செலவுகளின் தாக்கத்தை ஈடுகட்ட தனது வாகனங்களின் விலைகளை உயர்த்துவதாக ஏற்கனவே கூறியிருந்தது.
இதையும் படிங்க..கடைசியாக கடவுளை சந்தித்துவிட்டேன்.! நெகிழ்ந்த எஸ்.எஸ் ராஜமௌலி.. யார் தெரியுமா அது.?
மாருதி சுசுகி நிறுவனம் சிறிய கார் ஆல்டோ தொடங்கி, எஸ்யூவி (SUV) கிராண்ட் விட்டாரா வரையிலான பல்வேறு வாகனங்களை விற்பனை செய்கிறது. அவை ரூ. 3.39 லட்சம் முதல் ரூ. 19.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் உள்ளன.
ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகியவையும் இந்த மாதம் முதல் விலையை உயர்த்துவதற்கான திட்டங்களை அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூறியது போல ஜீப் இந்தியா நிறுவனம் 2 முதல் 4% சதவீதம் வரை விலை உயர்த்த உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் 5 % சதவீதம் வரையும், எம்.ஜி மோட்டார் நிறுவனம் தனது எஸ்யூவியின் விலையை ரூ.90,000 வரையும், கியா நிறுவனம் ரூ.50,000 வரையும், ஹோண்டா நிறுவனம் ரூ.30,000 உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!