ஆட்டோ எக்ஸ்போ 2023ல் மாருதி சுஸுகியின் ஜிம்னியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2023ல் மாருதி சுஸுகியின் ஜிம்னியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மாருதி சுஸுகி ஜிம்னியின் ஐந்து-கதவுகளை கொண்ட மாருதி சுஸுகி ஜிம்னியை அந்நிறுவன ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னிக்கான முன்பதிவுகள் ஜன.12(நேற்று) முதல் தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்வதற்கான டோக்கன் தொகை ரூ.11,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேக்கரின் உயர்தர NEXA டீலர்ஷிப்களில் இந்த ஆஃப்-ரோடர் விற்பனைக்கு வழங்கப்படும். இதுக்குறித்து மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, ஏசியாநெட்டுக்கு அளித்த பேட்டியில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிம்னி ஒரு ஐகானிக் பிராண்ட்.
இதையும் படிங்க: Auto Expo 2023: 2025ல் வெளியாகிறது மாருதி சுசுகியின் முதல் எலக்ட்ரிக் SUV.. ஆட்டோ எக்ஸ்போவில் சூப்பர் அப்டேட்!
5 கதவுகளை கொண்ட ஜிம்னி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது SUV போன்ற அமைப்போடும் கடினமான நிலப்பரப்புகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஜிம்னி, பிரிவில் எங்கள் நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது. வரவிருக்கும் இந்திய ஆட்டோமொபைல் துறையில், பணவீக்கம், வட்டி விகிதங்கள் உட்பட பல விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். கடன் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன, சில்லறை விற்பனையில் சுமார் 80% கடன்கள் மூலம் நடக்கிறது. அதுமட்டுமின்றி, தொழில்துறை விநியோகச் சங்கிலி தடைகள், செமி கண்டெக்டர் பற்றாக்குறை, சில சமூக-அரசியல் நிகழ்வுகள் மற்றும் கோவிட் போன்ற சூழ்நிலைகளையும் இந்திய ஆட்டோமொபைல் துறையில் கண்டுள்ளது.
இதையும் படிங்க: Auto Expo 2023: பட்டையை கிளப்பும் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி.. விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
இருந்தாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். அடுத்த நிதியாண்டில், முந்தைய ஆண்டில் 3.80 மில்லியனாக இருந்த அளவை 4.10 மில்லியனைத் தொடும் என்று நிறுவனம் கணித்துள்ளது. தொழில்துறையில் எங்களிடம் 95%க்கும் அதிகமாக மாடல்களுக்கு மிக உயர்ந்த உள்ளூர்மயமாக்கல் நிலைகள் உள்ளன. சுசுகி ரூ. 10,000 கோடி பேட்டரியில் முதலீடு செய்திருப்பதால், முன்பு வெளியிடப்பட்ட eVX நிறைய உள்ளூர்மயமாக்கலைக் கொண்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரிகள் அதிகபட்சமாக செலவாகும். உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க ஒரே வழி உற்பத்தியை அதிகரிப்பதுதான் என்று தெரிவித்தார்.