பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். முன்னதாக ஆட்டோ எக்ஸ்போவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். இதில் பல ஆடம்பர மற்றும் ஹைடெக் அம்சங்களைக் கொண்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: ஹூண்டாய் சிஓஓ தருண் கர்க்குடன் ஏசியாநெட் சிறப்பு நேர்காணல்
undefined
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான மாருதி எக்ஸ்போவில் இரண்டு புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது. அதே நேரத்தில், MG அதன் புதிய Euniq 7 ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, பசுமை ஹைட்ரஜனில் ரயில்கள், விமானங்கள், லாரிகள் மற்றும் பேருந்துகளை இயக்க முடியும். இன்று இந்தியா இந்த ஆற்றலை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது.
இதையும் படிங்க: எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபாவுடன் ஏசியாநெட் சிறப்பு நேர்காணல்
ஆனால் தொழில்துறை கண்டுபிடிப்புகளால் இந்தியா பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும். மாற்று எரிபொருளைப் பற்றி ஆட்டோமொபைல் துறை தீவிரமாகச் சிந்திப்பதில் மகிழ்ச்சி. அடுத்த ஓராண்டுக்குள் நாட்டின் சாலைகளில் லட்சக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படும். நாங்கள் தொடர்ந்து மின்சார வாகனங்களில் பணியாற்றி வருகிறோம் என்றார்.