Kawasaki Versys X 300 : மேட் இன் இந்தியா தயாரிப்பாக Kawasaki நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Kawasaki Versys X 300 என்ற பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.
கவாஸாகி தனது வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை இந்திய சந்தைக்கு உள்ளூர்மயமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பைக் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Kawasaki நிறுவனத்தின் மிகவும் விரும்பப்படும் பைக்காக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிஞ்ஜா 300 மற்றும் டபிள்யூ175க்குப் பிறகு, கவாஸாகி இந்தியாவிலிருந்து உள்ளூர்மயமாக்கப்பட்ட மூன்றாவது பைக் இதுவாகும். பாடி பேனல்கள், சில எலக்ட்ரானிக்ஸ், டயர்கள், எஞ்சின் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நிஞ்ஜா 300க்கு ஒத்த அளவிலான உள்ளூர்மயமாக்கலைக் இந்த புதிய பைக்கில் எதிர்பார்க்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உடல் அமைப்பு மற்றும் வண்டியில் பொருத்தப்பட்டிருக்கும் உபகரணங்களின் அடிப்படையில் பெரும்பாலும் முந்தைய மாடலை போலவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. நிஞ்ஜா 300ல், 296cc லிக்விட்-கூல்டு ட்வின்-சிலிண்டர் எஞ்சின் 39hp மற்றும் 26Nm டார்க்கை உருவாக்குகிறது, மேலும் வெர்சிஸில் இதே போன்ற அம்சங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
முன்னதாக கவாஸாகி நிறுவனத்தின் வெர்சிஸ்-எக்ஸ் 300 வெளியானபோது அது பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் இப்போது உள்நாட்டிலேயே (இந்தியாவில்) தயாரிக்கப்பட்டதால், கவாஸாகியின் இந்த பைக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவாசகியின் நிஞ்ஜா 300ன் விலை தற்போது ரூ. 3.43 லட்சம் உள்ள நிலையில் இந்த புதிய பைக் சுமார் 4.15 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.