JEEP Wrangler Facelift : ஜீப் இந்தியா இறுதியாக தனது ரேங்க்லர் ஃபேஸ்லிஃப்ட்டை இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதல் டெலிவரி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகழ்பெற்ற ஜீப் நிறுவனத்தின் ஆஃப்-ரோடரான புதிய Wrangler Facelift இரண்டு வகைகளில் கிடைக்கிறது, அதாவது அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் ஆகிய இரு வகைகளில் அது கிடைக்கிறது. முற்றிலும் மாறுபட்ட வெளிப்புறம் மற்றும் பல புதிய அம்சங்களுடன், இந்த காருக்கான டெலிவரிகள் 2024 மே நடுப்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ரேங்க்லர் ஒரு ஜீப் ஆஃப்-ரோடராக உள்ளது, இதில் சிக்னேச்சர் ஏழு-ஸ்லேட் பிளாக்-அவுட் கிரில், புதுப்பிக்கப்பட்ட ஃபேசியாவுடன் கூடிய அகலமான பம்பர் மற்றும் அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் பதிப்புகளுக்கு முறையே 18-இன்ச் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்கள் கொண்டது. மேலும் அதன், விண்ட்ஷீல்டு இப்போது கொரில்லா கிளாஸ் பாதுகாப்பைப் பெறுகிறது.
வண்ண விரும்பிகளுக்கான, ரேங்க்லர் ஃபேஸ்லிஃப்டை ஐந்து வெளிப்புற நிழல்களில் பெற்றுக்கொள்ளலாம். அதாவது பிரைட் ஒயிட், கிரானைட் கிரிஸ்டல், ஃபாயர்கிராக்கர் ரெட், பிளாக் மற்றும் சர்ஜ் கிரீன் ஆகிய வண்ண விருப்பங்களில் மக்கள் இதை பெற்றுக்கொள்ளலாம். நிச்சயம் ஒரு சிறந்த Off-Road அனுபவத்தை தங்களுக்கு விருப்பன வண்ணம் கொண்ட காரில் பெறுவது ஒரு தனி அனுபவமாக இருக்கும்.
உட்புற அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த SUV இப்போது 12.5-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-ப்ளே, 12-வழி இயங்கும் முன் இருக்கைகள், ஆறு ஏர்பேக்குகள், TPMS மற்றும் ஒரு ADAS தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சங்களாகும்.
மே மாதம் முதல் இந்த இரு கார்கள் விற்பனைக்கு வரும் நிலையில் ஜீப் ரேங்லர் அன்லிமிடெட் ரூ. 67.65 லட்சம் என்ற விலைக்கும், ஜீப் ரேங்லர் ரூபிகான் ரூ. 71.65 லட்சம் என்ற விலைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.