Yezdi : இன்னும் ஓரிரு மாதம் தான்.. இந்திய சந்தையில் புது பைக்கை களமிறக்கும் Yezdi - என்ன பைக் தெரியுமா?

By Ansgar R  |  First Published Apr 25, 2024, 11:57 AM IST

Yezdi Adventure 350 : பிரபல Yezdi நிறுவனம் இந்திய சந்தையில் இந்த 2024ம் ஆண்டு புதிய பைக் ஒன்றை களமிறக்கவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.


பிரபல ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள், இந்தியாவில் அதன் பல பைக்குகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது என்ற தகவல் அண்மையில் வெளியானது. மேலும் ஜாவா 350 மற்றும் ஜாவா பெராக் ஆகியவற்றின் 2024 பதிப்புகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, சில அதிகாரப்பூர்வ தகவலின்படி அந்நிறுவனம் 2024 யெஸ்டி அட்வென்ச்சரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலான யெஸ்டி அட்வென்ச்சர் 350 என்று பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, இது மே மாத இறுதியில் அல்லது ஜூன் 2024ன் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். 

Tap to resize

Latest Videos

விரைவில் அறிமுகமாகும் பைக்குகள்.. ஸ்கூட்டர்கள் என்னென்ன.? எதிர்பார்ப்பு எகிறுது.!!

இயந்திர மாற்றங்களைத் தவிர, 334cc திரவ-குளிரூட்டப்பட்ட மோட்டார் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பைக் ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2024 Yezdi அட்வென்ச்சர் 350, Hero Xpulse 200 4V மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 உள்ளிட்ட பைக் வரிசையில் இடம்பெறும். 

கடந்த 1978ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது முதல் பைக்கை அறிமுகம் செய்தது எஸ்ட்டி. முதல்முதலில் இரட்டை சைலென்சர் கொண்ட பைக்குகளை அறிமுகம் செய்த நிறுவனம் Yezdi என்பது குறிப்பிடத்தக்கது. இத புதிய Yezdi Adventure 350 இந்திய சந்தியில் அறிமுகமாகும்போது 2,50,000 என்ற விலையை விட சற்று அதிகமான விலையில் அறிமுகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

ஓலாவை தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்த ஹீரோ.. விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இவ்வளவு வசதிகள் இருக்கா!

click me!