2001 ஆம் ஆண்டு முதல் ஹோண்டா ஆக்டிவா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் தற்போது விற்பனையாகும் முதல் 5 மலிவான பெட்ரோல் ஸ்கூட்டர்களின் பட்டியல் இங்கே காணலாம்.
ஹீரோ டெஸ்டினி பிரைம் - ரூ.71,499
ஹீரோ நிறுவனத்தின் டெஸ்டினி பிரைம் (முன்னர் டெஸ்டினி 125) நாட்டிலேயே மிகவும் மலிவு விலையில் 125சிசி ஸ்கூட்டர் ஆகும். இதன் அறிமுக விலை ரூ.71,499. இது USB சார்ஜிங் போர்ட், வெளிப்புற எரிபொருள் நிரப்பு மற்றும் அரை டிஜிட்டல் கருவி போன்ற அம்சங்களுடன் வருகிறது. குறைந்த விலையில் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்.
undefined
ஹோண்டா டியோ - ரூ.70,211
ஹோண்டா ஆக்டிவா ஒரு குடும்ப ஸ்கூட்டராக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. அதே போல அதன் இன்னொரு வாகனமான டியோ கல்லூரி இளசுகளின் பேவரைட்டாக இருக்கிறது. டியோவின் கூர்மையான ஸ்டைலிங், ஆக்டிவாவைப் போன்ற உறுதியான அடிப்படைகளை உள்ளடக்கியது. மேலும் இது கணிசமாக மலிவான விலையில் வருகிறது.
ஹீரோ ப்ளேஷர் ப்ளஸ் - ரூ.70,338
இந்தப் பட்டியலில் அடுத்த ஸ்கூட்டர் மீண்டும் பட்ஜெட் ஸ்பெஷலிஸ்ட் ஹீரோவிடமிருந்து வருகிறது. அதன் ப்ளேஷர்+ வடிவில். இது 110சிசி ஸ்கூட்டர் ஆகும். இதன் விலை அடிப்படையான பதிப்பின் விலை ரூ.70,338 ஆகவும், எல்இடி ஹெட்லைட் மற்றும் ஜியோ-ஃபென்சிங் மற்றும் லொகேஷன் ட்ராக்கிங் போன்ற இணைக்கப்பட்ட அம்சங்களைப் பெறும் வரம்பில் உள்ள Xtec மாறுபாட்டின் விலை ரூ.82,238 ஆகவும் இருக்கும்.
ஹீரோ சூம் - ரூ.71,484
Pleasure+ போன்ற அதே 110.9cc இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. Xoom ஒரு ஹோண்டா டியோ போட்டியாளர், இதில் ஸ்போர்ட்டி ஸ்டைலிங் மற்றும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் புளூடூத் இணைப்பு மற்றும் டாப் வேரியண்டில் டயமண்ட்-கட் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும். இதன் விலை ரூ.70,184ல் தொடங்கி ரூ.78,517 வரை செல்கிறது.
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் - ரூ.65,514
இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மிகவும் மலிவு விலை பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகும். TVS ஸ்கூட்டி பெப் சாதாரண 87.8சிசி மோட்டார் உள்ளது. இது ஒரு சாதாரண 5.4hp மற்றும் 6.5Nm ஐ வெளிப்படுத்துகிறது. மேலும் இது TVS ஸ்கூட்டி பிராண்டை அதன் 29வது ஆண்டாக அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?