XUV.e9 மற்றும் BE.05 ஆகியவை ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு, விரைவில் உற்பத்தி நிலைக்குச் செல்ல உள்ளன. தேவைக்கேற்ப டெலிவரி சேவைகளைப் பூர்த்தி செய்ய இலகுரக வர்த்தக வாகனங்களில் கவனம் செலுத்தப்படும் என மஹிந்திரா கூறியுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் 2030ஆம் ஆண்டு வரையிலான தனது வாகன உற்பத்தித் திட்ட வரைபடத்தை வெளியிட்டுள்ளது. ஒன்பது ஏழு மின்சார வாகனங்கள் உள்பட 23 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
XUV400 மற்றும் XUV 700 போன்ற தற்போதைய மாடல்களுக்கான அப்டேட்கள் 16 புதிய மாடல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. XUV e8 என்று பெயரில் XUV 700 காரின் எலெக்ட்ரிக் மாடலையும் கொண்டுவர உள்ளது. சில புத்தம் புதிய கார்களும் பட்டியலில் வருகின்றன. வரவிருக்கும் 5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் மற்றும் ஸ்கார்பியோ-என் அடிப்படையிலான பிக்கப் டிரக் ஆகியவையும் இதில் அடங்கும்.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ள மஹிந்திரா XUV க்கு அடுத்த புத்தம் புதிய நடுத்தர அளவிலான SUV கார் ஒன்றை தயாரித்து வருகிறது. ஏற்கனவே பல எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
XUV.e9 மற்றும் BE.05 ஆகியவை ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு, விரைவில் உற்பத்தி நிலைக்குச் செல்ல உள்ளன. தேவைக்கேற்ப டெலிவரி சேவைகளைப் பூர்த்தி செய்ய இலகுரக வர்த்தக வாகனங்களில் கவனம் செலுத்தப்படும் என மஹிந்திரா கூறியுள்ளது.
புதிய வெளியீடுகளில் ஐந்து ICE வாகனங்கள் மற்றும் இரண்டு EVகள் அடங்கும் என்று தெரிகிறது. இவை நடுத்தர (1.3-1.5 டன்) மற்றும் பெரிய (1.7-2.0 டன்) ரக கார்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மஹிந்திராவின் சுப்ரோ மற்றும் ஜீட்டோ கார்கள் LCV கார்கள் பிரிவில் 49 சதவீத சந்தைப் பங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mahindra Marazzo : எப்படி இருந்த பங்காளி நீ! மஹிந்திரா மராஸ்ஸோவுக்கு இப்படியொரு கதியா!