Indian Roadmaster Elite : சுமார் 123 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் துவங்கப்பட்டது தான் Indian Motorcycle நிறுவனம். இந்தியாவில் பலருக்கு பரிச்சயம் இல்லை என்றாலும், இங்கும் தனது பைக்குகளை விற்பனை செய்கிறது IM.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் தனது 2024ம் ஆண்டு "ரோட்மாஸ்டர் எலைட்" பைக்கை வெளியிட்டது. மேலும் அந்த நிறுவனம் இப்போது இந்தியாவில், அந்த வண்டியின் விலையை அறிவித்துள்ளது. 1904ம் ஆண்டு வெளியான Indian Camelback வண்டியை நினைவுகூரும் வகையில், அந்நிறுவனம் குறைந்த அளவிலான Indian Roadmaster Elite வண்டிகளை விற்பனை செய்யவுள்ளது.
"இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட்டின்" விலை இந்தியாவில் ரூ. 71.82 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இது நமது நாட்டில் விற்பனையாகும் மிக விலையுயர்ந்த பைக்குகளில் ஒன்றாக உள்ளது என்றே கூறலாம். ஆனால் இந்த ரோட்மாஸ்டர் எலைட், உலக அளவில் 350 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் எங்க பாத்தாலும் Zero is Good! எதுக்காக இப்படி விளம்பரம் பண்ணுறாங்க தெரியுமா?
இந்த 2024ம் ஆண்டு இந்தியன் ரோடுமாஸ்டர் எலைடில் உள்ள, எரிபொருள் டேங்க் மற்றும் ஃபுட்-ரெஸ்ட் ஆகியவற்றில் காணப்படும் கிராபிக்ஸ் டிசைன், உண்மையில் அதன் கவர்ச்சியை அதிகரிக்கிறது என்றே கூறலாம். இந்த பைக்கில் க்ளாஸ் பிளாக் டேஷ், பிளாக்-அவுட் விண்ட்ஸ்கிரீன் மற்றும் கைகளால் வர்ணம் பூசப்பட்ட கோல்டன் பின்ஸ்ட்ரிப்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதன் அழகு ஒருபுறம் என்றால், இதில் உள்ள ஆப்பிள் கார்ப்ளே மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் கொண்ட 7-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே போன்ற அம்சஙகள், இந்த பைக்கை மாடர்ன் மெஷினாக மாற்றுகிறது என்றே கூறலாம். LED லைட்டிங் சிஸ்டம், 12-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் என்று ஒரு குட்டி கார் போல செயல்படுகிறது இந்த பைக்.
2024 ரோட்மாஸ்டர் எலைட்டை இயக்குவது ஒரு ஏர்-கூல்டு, 1,890சிசி, வி-ட்வின் என்ஜினாகும். இது 2,900ஆர்பிஎம்மில் 170என்எம் முறுக்குவிசையை வெளியிடுகிறது. சுமார் 412 கிலோ எடையுள்ள ரோட்மாஸ்டர் எலைட் பல பெரிய பைக்குகளை விட கனமானது. சஸ்பென்ஷன் அமைப்பானது டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஏர் அட்ஜஸ்ட் கொண்ட மோனோஷாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.