இந்த வைரல் வீடியோ பொலிரோவின் நம்பகத்தன்மை மற்றும் வலிமையை நிரூப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. வீடியோவைப் பார்த்த பலர் மீட்புக் குழுவினருடன் சேர்ந்து மஹிந்திரா பொலிரோவையும் பாராட்டியுள்ளனர்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஹீரோவாக செயல்பட்ட மஹிந்திரா பொலிரோ காரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. மீட்புக் குழுவினர் கிட்டத்தட்ட மூழ்கிய நிலையில் உள்ள பொலிரோ காரில் செல்லும் காட்சி வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த காட்சி, இதுவரை 13 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் பேர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.
பொலிரோ கிட்டத்தட்ட முழுமையாக நீருக்குள் இருப்பதை வீடியோவில் காணலாம். அதன் ஜன்னல்கள் மட்டுமே வெள்ளத்திற்கு மேலே தெரிகிறது. பொலிரோவின் மேல் அமர்ந்திருப்பவர்கள் ஆபத்தான வெள்ளத்தில் சென்று மற்றவர்களுக்கு உதவுவதைக் காணலாம்.
600 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்மூத் டிரைவிங்.. அசத்தலா வசதிகளுடன் டாடா கர்வ் EV எவ்வளவு தெரியுமா?
It’s always Mahindra to the rescue, and they rise again! Here’s a video of the recent Malappuram Kerala floods ft Bolero 🚙 🌪️shared by IG page - autojournal_india. Please like & RT until it reaches sir! ❤️🔥 pic.twitter.com/ab2r9tpImy
— Kasi Viswanathan S (@Kaseebro)மஹிந்திரா பொலேரோ, அதன் உறுதியான கட்டுமானம் மற்றும் ஆஃப்-ரோடு திறமைக்கு பெயர் பெற்றது. நீண்ட காலமாக சாலை வசதிகள் அதிகம் இல்லாத கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் ஓட்டுவதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. இந்த வைரல் வீடியோ பொலிரோவின் நம்பகத்தன்மை மற்றும் வலிமையை நிரூப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வீடியோவைப் பார்த்த பலர் மீட்புக் குழுவினருடன் சேர்ந்து மஹிந்திரா பொலிரோவையும் பாராட்டியுள்ளனர். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்கி வீடுகளை இழந்துள்ளனர்.
மஹிந்திரா நிறுவனம் தார், எக்ஸ்யூவி700, ஸ்கார்பியோ என் போன்ற புதிய தலைமுறை எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வதற்கு முன்பு, பொலிரோ மஹிந்திராவின் முதன்மையான வாகனமாக இருந்தது. அதிகப வருவாய் ஈட்டித் தருவதாகவும் இருந்தது. இந்த வலிமையான கார், மஹிந்திராவின் மொத்த பயணிகள் வாகன விற்பனையில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
பஜாஜ் சி.என்.ஜி. பைக் வாங்கத் துடிக்கும் 33,000 பேர்! 77 நகரங்களில் விற்பனைக்கு ரெடி!