டொயோட்டா டாப் டக்கர் சேல்ஸ்! ஒரே மாதத்தில் அடிச்சுத் தூக்கிய விற்பனை! இதுதான் புது ரெக்கார்டு!

By SG Balan  |  First Published Aug 1, 2024, 3:56 PM IST

ஜூலை மாதத்துடன் முடிந்த ஓராண்டில் டொயோட்டா நிறுவனத்தின் கார் விற்பனை 44% அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 31,656 கார்கள் விற்பனையாகியுள்ளன.


ஜூலை மாதத்துடன் முடிந்த ஓராண்டில் டொயோட்டா நிறுவனத்தின் கார் விற்பனை 44% அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 31,656 கார்கள் விற்பனையாகியுள்ளன.

டொயோட்டா நிறுவனம் ஜூலை 2024 இல் 31,656 கார்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. சிறந்த மாதாந்திர விற்பனையையும் பதிவுசெய்துள்ளது. அதுவும் தொடர்ந்து இரண்டு மாதங்களாக முந்தைய விற்பனை சாதனையை மிஞ்சியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஜூலையில் இந்தியாவில் விற்பனையானவை 29,533 யூனிட்கள். ஏற்றுமதி செய்தவை 2,123 யூனிட்கள். கடந்த ஜூன் மாதம் 21,911 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த மாதம் 44% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஆகஸ்டு 1 முதல் புதிய FASTag விதிமுறைகள்! KYC அப்டேட் பண்ணலைன்னா சிக்கல் தான்!

முன்னதாக மே மாதத்தில் 27,474 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில், 1,81,906 கார்களை டொயோட்டா விற்றிருக்கிறது. 2023ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 46% அதிகம். ஜூலை 2023 இல் இந்த எண்ணிக்கை 1,24,282 ஆக இருந்த்து.

இது குறித்து டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவை பிரிவின் துணைத் தலைவர் சபரி மனோகர் கூறுகையில், "ஜூலை 2024 இல் அதிகபட்ச விற்பனை நடந்திருப்பது எங்களின் மற்றொரு முக்கிய மைல்கல். இதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக SUV மற்றும் MPV பிரிவுகளில் எங்கள் மாடல்களுக்கு தேவை அதிகமாக உள்ளன" என்றார்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தங்களது பிடாடி ஆலையில் உற்பத்தித் திட்டத்தை மேம்படுத்தி, மூன்றாவது ஷிப்டைச் சேர்த்துள்ளது. மேலும், "T GLOSS" மூலம் அதன் கார் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

ராக்கெட் வேகத்தில் உயரப் போகும் தங்கத்தின் விலை... இனி விலை குறைய வாய்ப்பு கிம்மிதான்!

click me!