ஹூண்டாய் Exter கார் மாடல், முதன்முறையாக இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிறது. 3 வேரியண்ட்களில் அறிமுகமாகும் இதன் விலை 8.5 லட்சம் முதல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் எக்ஸ்டர் சிஎன்ஜி வகை காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்தியாவில் டாடா மோட்டார்ஸுக்குப் பிறகு அதன் CNG கார்களுக்கு இந்த இரட்டை சிலிண்டர் அமைப்பை வழங்கும் இரண்டாவது உற்பத்தியாளர் ஹூண்டாய் நிறுவனமாகும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா, தனது எக்ஸ்டர் மாடலில் புதிய CNG வகையில், டூயல்-சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல், எரிபொருள் திறனை அதிகரிக்க மற்றும் பயண தூரத்தை உயர்த்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
டூயல்-சிலிண்டர் தொழில்நுட்பம்
- இந்த மாடல், இரண்டு சிலிண்டர்களுடன் வருகிறது, ஒவ்வொன்றும் 30 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.
- இந்த தொழில்நுட்பம், கார் பாக்ஸ் ஸ்பேஸை அதிகரிக்கவும், பயணிகள் மற்றும் சரக்கு இடத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
எரிபொருள் திறன்
- CNG மூலம் அதிகபட்ச எரிபொருள் திறனைக் கொண்டுள்ளது, இது பயணச் செலவை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்கள்
- காரில், இரட்டை ஏர்பேக்குகள், ABS எல் இன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
விலை
- புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் CNG விலை ரூ. 8.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மற்ற வேரியண்ட்களும் கிடைக்கின்றன.
- ஹூண்டாய் Exter S CNG Rs 8.50 lakh
- ஹூண்டாய் Exter SX CNG Rs 9.23 lakh
- ஹூண்டாய் Exter Knight SX CNG Rs 9.38 lakh ஆகிய விலைகளில் கிடைக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- CNG மாடல், குறைந்த கார்பன் உமிழ்வுடன் வருகிறது, இது சுற்றுச்சூழலுக்கு உதகந்த பயனத்தை வழங்குகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் CNG மாடல், எரிபொருள் திறன், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கிறது. இந்த மாடல், இந்திய சந்தையில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என நம்பப்படுகிறது.