ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கினால், புகார்தாரருக்கு பழைய வாகனத்துக்குப் பதில் புதிய வாகனத்தை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் நிராகரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, கடந்த 2009ஆம் ஆண்டு பழுதடைந்த காரை விற்றதற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிவில் இந்த வழக்கில் இதற்கு முன் தெலுங்கானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தீர்ப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் குறைபாடுள்ள வாகனத்திற்குப் பதிலாக புதிய வாகனத்தை வாடிக்கையாளருக்கு வழங்குமாறும் அறிவுறுத்தியது. இந்த வழக்கில் முழுமையான மற்றும் இறுதித் தீர்வாக ரூ. 50 லட்சம் பணத்தைப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஆகஸ்ட் 10, 2024 ஆம் தேதிக்குள் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேப்சூல் கார் தெரியுமா? டயர், ஸ்டியரிங் இல்லாமல் இயங்கும் எதிர்கால எலெட்ரிக் கார் இதுதான்!
இந்த உத்தரவின் அடிப்படையில் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கினால், புகார்தாரருக்கு பழைய வாகனத்துக்குப் பதில் புதிய வாகனத்தை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன்-ஜூலை 2012 இல், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, பழைய வாகனத்திற்குப் பதில் புதிய வாகனத்தை மாற்றிக்கொடுக்க முன்வந்ததாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. அப்போது அதை புகார் கொடுத்த வாடிக்கையாளர் ஏற்கவில்லை என்றும் இன்றுவரை அந்த வாகனத்தைப் பயன்படுத்தி இருந்தால், அது தேய்மானம் அடைந்திருக்கும் என்றும் பிஎம்டபிள்யூ தரப்பில் வாதிடப்பட்டது.
புகார்தாரர் புதிய BMW காரைப் பெறுவதற்குப் பதிலாக அதன் மதிப்புக்குச் சமமான தொகையைப் பெற ஆர்வம் காட்டியதாகவும் கூறியுள்ளது.
வழக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் செப்டம்பர் 25, 2009 அன்று BMW 7 சீரிஸ் வாகனத்தை வாங்கியிருந்தார். செப்டம்பர் 29, 2009 அன்று அதில் கடுமையான குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் நவம்பர் 16, 2009 அன்று, இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 418 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மலைபோல் குவிந்து கிடக்கும் தங்கம்! 46 ஆண்டுகள் கழித்து பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!