அலப்பறை கிளப்புறோம்... ரிலீசுக்கு ரெடியான ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450! மிரட்டலான வீடியோ அப்டேட்!

By SG Balan  |  First Published Jul 15, 2024, 7:37 PM IST

கெரில்லா 450 ஹிமாலயன் 450 மாடலை விட எடை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய கெரில்லா 450 இதுவரை இல்லாத பல புதிய நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியச் சந்தையில் பல புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. விரைவில் வெளியாக உள்ள புதிய பைக் கெரில்லா 450 எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

கெரில்லா 450 மோட்டர்சைக்கிள் ஷெர்பா 450 மாடலை அடிப்படையாகக் கொண்டது. கெரில்லா 450 ஹமாலயன் மாடலில் இருந்து சில அம்சங்களில் மட்டும் மாறுபட்டதாக இருக்கும். ஹமாலயன் மாடலைவிட குறைந்த அம்சங்களுடன் சிறந்த டயர்களுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Latest Videos

undefined

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 விலை ரூ.2.85 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. கெரில்லா ஹிமாலயனை விட சுமார் ரூ.50,000 விலை குறைவாக இருக்கலாம் என்று தெரிகிறது. கெரில்லா 450 விலை ரூ.2.35 லட்சம் முதல் ரூ. 2.4 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம்.

கேப்சூல் கார் தெரியுமா? டயர், ஸ்டியரிங் இல்லாமல் இயங்கும் எதிர்கால எலெட்ரிக் கார் இதுதான்!

ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 மோட்டார்சைக்கிள், ட்ரையம்ப் ஸ்பீட் 400, ஹீரோ மேவ்ரிக் 440, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440, பஜாஜ் டோமினார், பஜாஜ் பல்சர் என்எஸ் 400 இசட் மற்றும் கேடிஎம் 390 டியூக் போன்ற பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கெரில்லா 450 ஷெர்பா 452 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சின் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இருக்கும். கெரில்லா 450 ரெட்ரோ ரோட்ஸ்டர் வடிவமைப்பில் வட்டமான எல்இடி ஹெட்லைட்டும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாப் வேரியண்டில் டிரிப்பர் டேஷ் மற்றும் சிங்கிள் பீஸ் சீட் ஆகியவை இடம்பெறக்கூடும். ஆனால், கெரில்லா 450 ஹிமாலயன் 450 மாடலை விட எடை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய கெரில்லா 450 இதுவரை இல்லாத பல புதிய நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜூலை 17ஆம் தேதி கெரில்லா 450 மோட்டார்சைக்கிள் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். அப்போது இதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும் என புல்லட் பிரியர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

டப்பா காரை கொடுத்து ஏமாற்றிய BMW! ரூ.50 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

click me!