கிராஷ் டெஸ்டில் இத்தனை புள்ளிகள் தானா? பயனர்களுக்கு ஷாக் கொடுத்த் பிஎம்டபிள்யூ i4..!

By Kevin Kaarki  |  First Published Jul 8, 2022, 8:37 AM IST

2019 ஆண்டு சோதனை செய்யப்பட்ட 3 சீரிஸ் மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை போன்ற சென்சாரை இந்த மாடல் கொண்டிருக்கிறது.


யூரோ NCAP-இல் நடத்தப்பட்ட சமீபத்திய கிராஷ் டெஸ்ட்களில் பிஎம்டபிள்யூ i4 மாடல் நான்கு நடசத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. ஒட்டுமொத்த புள்ளிகளில் 64 சதவீதம் பெற்றதை அடுத்து இந்த மதிப்பெண் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: மாருதியின் முதல் Mid-Size எஸ்.யு.வி. - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

Latest Videos

undefined

“பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பேட்டரி எலெக்ட்ரிக் காம்பேக்ட் எக்சிக்யுடிவ் கார் i4 ஆடம்பரம் எப்போதும் பாதுகாப்பான ஒன்று தான் என்பதை குறிக்காது என்பதற்கு சான்றாக அமைந்து இருக்கிறது. 2019 ஆண்டு சோதனை செய்யப்பட்ட 3 சீரிஸ் மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை போன்ற சென்சார் கொண்டு இருக்கும் நிலையில், இந்த கிரான் செடான் மாடல் சில மிக முக்கிய கிராஷ் அவாய்டன்ஸ் புள்ளிகளை இழந்தது. இதன் காரணமாக தான் நான்கு நடசத்திர குறியீடுகள் வழங்கப்பட்டு இருக்கிறது,” என யூரோ NCAP தெரிவித்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் டூ-வீலர் உருவாக்கும் இந்துஸ்தான் மோட்டார்ஸ் - எப்போ வெளியீடு தெரியுமா?

இந்த செடான் மாடலின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது விபத்து ஏற்படும் பட்சத்தில் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் 87 சதவீதம் வரை சீராக செயல்படுகின்றன. i4 மாடல் பயணிகளுக்கு எல்லா பகுகிகளில் இருந்தும் சீரான பாதுகாப்பை வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. எனினும், பயணிகள் இடையே ஏற்படும் காயங்களை தவிர்க்க இதில் உள்ள பாதுகாப்பு சிஸ்டம் தவறி விட்டது. 

இதையும் படியுங்கள்: உலகில் இந்த புகாட்டி காரை வைத்திருக்கும் ஒரே இந்தியர் இவர் தான்...!

குழந்தைகள் பாதுகாப்பிற்கு i4 மாடல் முழு புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. இதற்கான கிராஷ் டெஸ்ட்களில் 6 முதல் 10 வயதுடைய சிறுவர்களுக்கு இணையான டம்மிக்கள் பயன்படுத்தப்பட்டன. காரில் ஐசோபிக்ஸ் மற்றும் i-சைஸ் பின்புற இருக்கைகளில் வழங்கப்பட்டு இருந்ததால், சிறுவர் ரெஸ்ட்ரைண்ட் சிஸ்டதக்திற்கான புள்ளிகளை இழந்தது.  

சாலையில் பயணம் செய்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்ற சோதனையில் i4 மாடல் 71 சதவீத ரேட்டிங் பெற்று இருக்கிறது. இந்த மாடலில் உள்ள பொனெட் பாதசாரிகளுக்கு சரியான பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. இந்த காரில் உள்ள ஆட்டோனோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரோட் யூசர் டிடெக்‌ஷன் உள்ளிட்டவை அடிக்கடி செயல்பட்டன. மேலும் இந்த கார் விபத்தில் சிக்கும் பட்சத்தில் மற்றொரு பாதிப்பை ஏற்படுத்தும் முன் பிரேக்குகளை செயல்படுத்தும் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்படவில்லை என யூரோ NCAP தெரிவித்து இருக்கிறது.

பிஎம்டபிள்யூ i4 மட்டும் இன்றி டொயோட்டா ஐகோ எக்ஸ், புதிய ஆல்பா ரோமியோ டொனெல் எஸ்.யு.வி., கியா ஸ்போர்டேஜ், மெர்சிடிஸ் பென்ஸ் டி கிளாஸ், சிட்டன் போன்ற மாடல்களின் கிராஷ் டெஸ்ட் முடிவுகளையும் யூரோ NCAP வெளியிட்டு உள்ளது. இதில் டொயோட்டா தவிர மற்ற மாடல்கள் அனைத்தும் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தி உள்ளன. 

click me!