
இந்த புதிய பல்சர் NS400Zன் வடிவமைப்பு, பல்சர் NS200ன் வடிவமைப்பின் பரிணாம வளர்ச்சி போன்று உள்ளது என்றே கூறலாம். இதன் ஹெட்லைட், அதன் பெரிய, Thunderbolt அமைப்பை கொண்ட DRLகள் மற்றும் LED புரொஜெக்டர் லைட்டுகள் தான் என்றால் அது மிகையல்ல. மேலும் பலரும் எதிர்பார்த்த வகையில், இதன் எரிபொருள் தொட்டி சற்று நீண்ட அமைப்பாக உள்ளது.
இந்த பல்சர் NS400Zன் பக்கவாட்டு மற்றும் பின் பகுதிகள் NS200களைத் தான் நினைவூட்டுகின்றன என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த புதிய பைக், கூர்மையான டெயில் பகுதியை கொண்டுள்ளது என்றே கூறலாம். மேலும் சில பைக் ஆர்வலர்கள் NS400Z, அதன் முன்னோடியான NS200ஐ விட பல வகைகளில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
பள்ளி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் கொடுத்த அன்புப் பரிசு! நெகிழ்ச்சியில் ஆசிரியர் ஜேம்ஸ்!
NS400Z ஆனது Dominar 400ல் நீங்கள் காணும் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 373cc, திரவ-குளிரூட்டப்பட்ட, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் ஆகும். இது 8,800rpmல் 39.4bhp மற்றும் 6,5000rpmல் 35Nm திறனை உண்டாக்கும். இது ஆறு வேக கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வண்டியின் சேஸைப் பொறுத்தவரை, NS400Z ஆனது, முன்புறத்தில் 43mm, USD ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட, ப்ரீலோட் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் மூலம் இடைநிறுத்தப்பட்ட அமைப்பை பயன்படுத்துகிறது. பிரேக்கிங் பொறுத்தவரை முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் கொண்டுள்ளது.
அறிமுக சலுகையாக ரூ. 1.85 லட்சத்தில் தொடங்கி இந்த பஜாஜ் பல்சர் NS400Z விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் இதுவரை எந்தஒரு 400சிசி பைக்கும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. Suzuki Gixxer 250 மற்றும் ட்ரையம்ப் ஸ்பீட் 400க்கு போட்டியாக இது களமிறங்கியுள்ளது என்றே கூறலாம்.