
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் அவர்களின் மன உறுதி மற்றும் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். சில விஷயங்களில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கலாம். சில சமயங்களில் மனக்குழப்பங்களும் ஏற்படலாம். எனவே பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். தொழில், வியாபாரம், படிப்பு, வேலை ஆகிய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்க உள்ளது. நீண்ட நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் விலகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
நீங்கள் வேலையில் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயல்படுவீர்கள். எனவே புதிய வாய்ப்புகளும், அங்கீகாரங்களும் உங்களுக்கு கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்லுறவு பேணுவது அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடலாம். புதிய திட்டங்கள் அல்லது பொறுப்புகள் உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதை வெற்றிகரமாக நடத்தி முடிப்பீர்கள். இந்த வாரம் உங்களுக்கு நிதி நிலைமை சீராக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட கால முதலீடுகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் நெருங்கியுள்ளது. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் சேமிப்பை அதிகரிக்கலாம். இருப்பினும் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முன் யோசனையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
குடும்பத்தில் நல்லிணக்கம் நிகழும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஏதேனும் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை நிதானமாக பேசி தீர்க்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நல்லுறவு பேணுவது நல்லது. நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு மன அமைதியை தரும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் அன்பு மற்றும் புரிதல் மேலோங்கும். உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தனிமையில் இருப்பவர்களுக்கு புதிய உறவுகள் மலர வாய்ப்புள்ளது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத ஒருவரால் நீங்கள் ஈர்ககப்படலாம். உணர்வுபூர்வமான விஷயங்களில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பது உறவை வலுப்படுத்தும்.
மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமைய உள்ளது. படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இது உங்களுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தரும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான பலன்களை தரவுள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பானதாக அமைய உள்ளது. இருப்பினும் சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். போதுமான ஓய்வு எடுப்பதுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். மன அழுத்தம் ஏற்படும் நேரத்தில் அதை குறைப்பதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறு உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டாலும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
தினமும் காலை வேளையில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டியது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தேவியை வழிபட்டு நெய் தீபம் ஏற்று வந்தால் நிதி நிலைமைகள் சீராகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து, பொருளாதாரம் மேம்படும். புதன்கிழமைகளில் பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது உணவுகள் கொடுப்பது சுப பலன்களைத் தரும். இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.