
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் தரவுள்ளது. சில செயல்களை நீங்கள் தலைமையேற்று நடத்தும் வாய்ப்புகள் கிடைக்கலாம். சில சமயங்களில் உங்கள் உணர்ச்சி பூர்வமான எதிர்வினைகள் விரைவாக மாறக்கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். அதிக விரயங்கள் ஏற்பட்டாலும் அனைத்தும் நல்லவையாக முடியும். இழுபறியாக இருந்த நிலைகள் மாறி, எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சில சமயங்களில் பணிகள் சவாலாக இருக்கலாம் அல்லது முடிவுகள் தாமதமாகலாம். ஆனால் உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பொறுப்புடன் செயல்பட வேண்டும். அழுத்தத்திற்கு அடிபணியாமல் இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை கைவிட வேண்டும். இந்த வாரம் பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்வதற்கு உகந்ததாக இருக்காது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரலாம். அசையா சொத்து அல்லது வாகன முதலீட்டிற்கு இது ஏற்ற நேரமாகும். மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தேர்விலும் பிற விஷயங்களிலும் முறையாக கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களையும், சாதகமான முடிவுகளையும் பெறலாம்
காதல் வாழ்க்கையில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். உங்கள் உணர்வுகளையும், விருப்பங்களையும் வெளிப்படுத்தி துணையிடம் இருந்து அதிக நம்பிக்கையைப் பெறுவீர்கள். கடந்த கால ஏமாற்றங்களை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் கவனம் செலுத்த இது ஒரு நல்ல நேரமாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். ஒருவர் இன்னொருவருக்காக தங்களது முழு நேரத்தையும் செலவிடுவீர்கள். குடும்ப விஷயங்களில் சராசரி முடிவுகளை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் குடும்பத்தினர் உதவியும் அன்பும் அளிப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாது. ஏற்கனவே வயிறு, இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கவனத்துடன் செயல்பட வேண்டும். முதுகு கை, கால், வலி, சுளுக்கு போன்ற விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் உங்களை விட்டு விலகியும் தோற்றுப் போகக்கூடிய காலகட்டம் நெருங்கியுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி செல்வாக்கு உயரும். லாபம் அபரிமிதமானதாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ஆகிய அனைத்து விஷயங்களிலும் வளர்ச்சியை காண்பீர்கள். இதன் மூலமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். அதற்கான பணிகளை தொடங்குங்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிலம், சொத்து தொடர்பான விஷயங்களில் நிலவி வந்த பிரச்சனைகள் சரியாகும். ஆன்மீக காரியங்களை செய்யக்கூடிய காலகட்டம் நிகழும். புதிய வேலை வாய்ப்புகள் தொழில்களை உருவாக்கும் யோகம் கிடைக்கும். பிறருடன் இருந்து வந்த சிறு சிறு பூசல்கள் அனைத்தும் நீங்கும்.
புதன்கிழமைகளில் பச்சைபயிறு தானம் செய்யலாம். ஒவ்வொரு காலையிலும் சூரியனுக்கு நீர் அர்ச்சனை செய்ய வேண்டும். புதன் வக்ர பெயர்ச்சி காரணமாக மிகப்பெரிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஓம் நமச்சிவாய மந்திரத்தை ஜெபிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் முருகர் வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இந்த வாரம் உங்களுக்கு சுபமானதாக அமைய வாழ்த்துக்கள்.