Tortoise Vastu: கூர்ம அவதாரம்.. வீட்டில் ஆமை சிலை வைத்தால் அதிர்ஷ்டத்தை தருமா?.. வாஸ்து டிப்ஸ்

By Asianet Tamil  |  First Published Jul 12, 2024, 2:34 PM IST

ஆமை என்பது மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படுகிறது. ஆமை என்றாலே துரதிர்ஷ்டவசமானது என்று சொல்வார்கள். ஆமை ஒருவரின் வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் என்ற பழமொழி உள்ளது.  ஆனால் ஆமை சிலைகளை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. ஆமை சிலைகளை நம்முடைய வீட்டில் எங்கே எப்படி வைக்கலாம் என பார்க்கலாம்.


கூர்ம அவதாரம்:  
அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பகவான் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மலையை தனது முதுகில் தாங்கி நின்றார் என்கிறது விஷ்ணு புராணம். எனவே ஆமை என்பது இறைவனின் அம்சம் அதிர்ஷ்டம் தரக்கூடியது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளவர்களுக்கு பண வருமானத்தை அதிகரிக்குமாம் ஆமை சிலைகள்.

உயிருள்ள ஆமை:
நம்முடைய வீட்டில் சிலர் ஹாலில் தோட்டத்தில் நீருற்றுகள் வைத்திருப்பார்கள். நீர் தொட்டிகள் அழகுக்காக வைத்திருப்பார்கள். அந்த நீருற்று தொட்டிகளில் உயிருள்ள ஆமையை வளர்க்க ஆசைப்படுவார்கள். மீன்களை வளர்ப்பது போல உயிருள்ள ஆமைகளை வீட்டிற்குள்ளோ தோட்டத்து நீர் தொட்டிகளிலோ வளர்க்கக் கூடாது. அது எதிர்மறை ஆற்றலை உருவாக்கி விடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

Tap to resize

Latest Videos

undefined

செல்வ வளம் தரும் ஆமை சிலை:
அதே நேரத்தில் ஆமை சிலைகளை நாம் வீட்டில் வைக்கலாம். நீங்கள் செல்லும் பாதையில் ஒரு ஆமை உங்களை கடந்து செல்வதைக் கண்டால் அதை கைகளில் எடுத்துச்செல்ல வேண்டாம். அது நல்ல விசயமல்ல.  அந்த ஆமையை கவனமாக எடுத்துச்சென்று அது செல்லும் திசையிலேயே பாதுகாப்பாக விடுவது நல்லது.

வீட்டில் பணம் புழங்க.. மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டுல ஒன்னு போடுங்க..!

வாஸ்து தோஷங்கள் நீங்கும்:
ஆமை சிலைகள் மங்களகரமானவை. நாம் வீட்டில் ஆமை சிலைகளை வைப்பதனால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். உங்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ ஆமை சிலையை வைக்க விரும்பினார் ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி மரம், படிகம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட ஆமை சிலையை வைத்துக் கொள்ளலாம். வாஸ்து தோஷங்கள் உள்ள வீடுகளில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். பண நெருக்கடிகள் இருக்கும். கடன் பிரச்சினை அதிகமாக இருக்கும்.

எந்த திசையில் வைக்கலாம்:
உலோகத்தினால் ஆன ஆமை சிலைகளை நாம் வீட்டில் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் வைப்பதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகும். கல்வி, சுப காரியங்கள், வேலை போன்றவைகளின் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையில் நற்காரியங்கள் நடைபெறும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மரத்தால் ஆன ஆமை சிலைகளை நாம் வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்கலாம். அது காரிய வெற்றியை உண்டாகும். ஸ்படிக ஆமையை நாம் தென்மேற்கு திசையில் வைக்கலாம். இதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும். வடகிழக்கு பகுதியில் ஸ்படிக ஆமையை வைப்பதனால் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

ஆமை வாங்க சிறந்த நாள்:
நாம் நம்முடைய வீட்டிற்கு ஆமை சிலைகளை வாங்க விரும்பினால் புதன், வியாழன், வெள்ளி போன்ற வார நாட்களில் வாங்கலாம். சுக்கிர ஹோரை, குரு ஹோரையில் ஆமை சிலைகளை வாங்கலாம். நம்முடைய வீட்டில் ஆமை சிலைகளை வைப்பதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் மூலம் செல்வ செழிப்பு ஏற்படும். பணத்தை ஈர்க்கும் சக்தி ஆமை சிலைக்கு உள்ளதாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Kala Sarpa Dosha: ராகு கேது.. உங்க ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கா? பரிகாரம் என்ன?

click me!