வரலட்சுமி விரதம் அன்று உரிய முறையில் பூஜையைச் செய்து தேவியை வேண்டிப் பிரார்த்தித்தால், மாங்கல்ய வரம் தந்திடுவாள்.
ஆடி மாதம் என்பது பெண்களுக்கான மிகவும் சிறப்பான மாதம் ஆகும். இம்மாதத்தில் தான் வரலட்சுமி விரதம் வருகிறது. அது மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக திருமணமான பெண்கள் கொண்டாடுகிற பண்டிகை இது. வரலட்சுமி பூஜை கொண்டாடுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மேலும் மனநிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும்.
வரலட்சுமி பூஜை:
ஒவ்வொருவர் குடும்பத்திலும் வரலட்சுமி பூஜை கொண்டாடுவதில் சிறிது வேறுபாடுகளோ இருக்கலாம். ஆனால் பூஜை முழுமை என்பது ஒரே விதமானதுதான். பெரும்பாலும், அம்பாளை, வீட்டுக்குள் அழைப்பது கலசத்தில் வரவழைத்து அமரச் செய்வது மற்றும் அலங்காரங்கள், ஆராதனைகள் செய்வது ஆகும். இவை செய்தால் லட்சுமி தேவி குளிர்ந்து போய்விடுவாள். மேலும் உங்களால் பூஜை செய்ய முடியவில்லை என்றால் அல்லது பூஜை தடைப்பட்டால், ஏதேனும் காரணத்தால் விரதம் இருக்க முடியவில்லை என்றால், பூஜை செய்பவர்கள் வீட்டுக்குச் சென்று, அங்கே நிகழும் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வரலட்சுமி விரதம் 2023: தேதி, லட்சுமி தேவிக்கான பூஜை மற்றும் முக்கியத்துவம்..!!
நைவேத்தியம்:
இந்நாளில் அன்னை லட்சுமிக்கு நைவேத்தியமாக வடை, பால் பாயசம், கடலைப் பருப்பு பாயசம், இட்லி கொழுக்கட்டை, அதிரசம், சுண்டல், பழங்கள் என நைவேத்தியம் வைப்பர். குறிப்பாக உங்களால் முடிந்ததைக் கொண்டு, நைவேத்தியம் செய்யலாம், தப்பே இல்லை.
தலை நோன்பு:
புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, முதல் பூஜையை தலை நோன்பு என்று கூறுவர். இந்த பூஜையை முன்னிட்டு, பிறந்த வீட்டில் இருந்து, அம்பாளின் முகம், கலசம், பூஜைக்கு வேண்டிய உபகரணங்கள், பழங்கள் என எல்லா விதமான சீர்த்தட்டும் கொண்டு வந்து கொடுப்பார்கள். இந்த நோன்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், நோன்புக்கயிறு வைத்து, அதையும் பூஜை செய்து, மஞ்சள்சரடையை வயதான சுமங்கலிகளைக் கொண்டு வலதுகையில் அணிந்து கொள்வார்கள். மேலும் நோன்புச் சரடுகளில் ஒவ்வொரு புஷ்பங்களைத் தொடுத்து அம்பாளின் பாதங்களில் வைத்து அதற்கும் பூஜை செய்யுங்கள். அதில் மஞ்சளும் பச்சரிசியும் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வரலக்ஷ்மி பூஜை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா..? மறவாமல் இன்று இதை செய்யுங்கள்..!
இறுதியாக, பூஜை முடிந்ததும் ஒவ்வொரு சரடாக எடுத்து சுமங்கலிகளுக்கும், கன்னி பெண்களுக்கும், வலது கையில் கட்டவேண்டும். அப்படிக் கையில் கட்டிக்கொள்ளும்போது, முன்னதாக கட்டிவிடுவோரின் கையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பூ, தேங்காய், பழங்களைக் கொடுத்து குங்குமமிட்டு சரடைக் கட்ட வேண்டும். பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். அதுபோல் இந்நாளில், தன்னை அழைத்து, ஆராதித்த இல்லங்களில் சுபிட்சத்தை கொடுப்பாள் தேவி. மேலும் பெண்களின் தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்வாள். தாலி வரத்தைத் தந்தருள்வாள்.