பூமியும், சந்திரனும் அவற்றின் சுற்றுப்பாதையில் இருக்கும்போது, வெகு சில சமயங்களில் விண்வெளியில் அவை இரண்டுக்கும் மிக நெருக்கமான சந்திப்பு நடைபெறும். அப்போது தெரியும் சந்திரன் தான் "சூப்பர் மூன்" என்று அழைக்கப்படுகிறது. மிகவும் அரிதான இந்த நிகழ்வு, இந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நாட்களான ஆகஸ்ட் 20, 2023 மற்றும் செப்டம்பர் 29, 2023 ஆகிய தேதிகளில் இந்த சூப்பர் மூன் தென்படும். அப்படி தென்படும் இந்த சூப்பர் மூன் உங்கள் ராசிகளில் எதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து தான் இந்த பதிவில் காண உள்ளோம்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் என்று இந்த ராசிக்காரர்களின் மீது இந்த சூப்பர் மூன் தாக்கம் இருக்கும். அதாவது இந்த சூப்பர் மூன் நிகழ்வின்போது சந்திரன் மற்றும் வியாழன் நிலையான நிலையில் இருப்பதால், மேற்குறிய ராசிக்காரர்கள் உணர்வு ரீதியாக சில எதிர்வினைகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகவே உங்கள் உங்களிடம் சவால் விடும் நபர்களிடம் இருந்து சில காலம் தள்ளியிருப்பது சிறந்தது.
ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் இந்த ரத்தினக்கல்லை அணிந்தால் போதும்.. உங்க காட்டில் பண மழை தான்..
மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் என்று இந்த ராசிக்காரர்கள் மீது ஒரு நல்ல தாக்கத்தையும் அதே சமயம் சில அசௌகர்யங்களையும் ஏற்படுத்துகிறது. நீடித்த பிரச்சனையை தீர்க்கக்கூடிய சில தகவல்கள் மேற்குறிய ராசிக்காரர்களை உடனைடியாக வந்து சேரும். மேலும் கோபம் அல்லது ஏமாற்றம் போன்ற சில உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவசியம் வந்தாலும் அதை வெளிவிடாமல் இருப்பது நல்லது.
மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள், உங்களுக்கென்று நீங்கள் போட்டுவைத்துள்ள வரம்புகளை விடுவித்து உங்கள் உண்மையான ஆசைகளைத் தொடர வேண்டிய நேரம் இது. நீங்கள் மேற்கொள்ளும் திட்டத்தில் கவனம் செலுத்துவதையும் இந்த சூப்பர் மூன் மேம்படுத்தும். ஆனால் இந்த மாற்றத்திற்கு நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த 4 ராசிகள் உடலுறவை ஒருபோதும் கைவிடமாட்டார்கள்; காமமே அவர்களது வாழ்க்கை..!!