ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்கள்.
ஆகஸ்ட் மாதம் இன்று தொடங்கி உள்ளது. ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் தனிச்சிறப்புகள் உண்டு. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்கள். முழு நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். தங்களின் பேச்சால் அனைவரையும் ஈர்க்கும் சக்தி இவர்களுக்கு உள்ளதாம்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள். ரத்தின சாஸ்திரத்தின்படி, ஜாதகத்தில் பிறந்த தேதி அல்லது கிரகங்களின் நிலையைப் பார்த்து ரத்தினங்கள் அணியப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் மட்டுமே பச்சை நிற ரத்தின கல்லை (peridot stone) அணியலாம். இது பணம் மற்றும் அதிர்ஷ்ட கல் என்றும் அழைக்கப்படுகிறது.
யாரெல்லாம் அணியலாம்?
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு பச்சை நிற ரத்தின கல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கல்லை அணிவதால் நல்ல ஆற்றல் கிடைப்பதுடன் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுடன் தொடர்புடையது. அதனால்தான் ஜாதகத்தில் இந்த கிரகங்களின் குறைவாக உள்ள ராசிக்காரர்கள் இந்த ரத்தினத்தை அணியலாம். ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த ரத்தினத்தை அணிய வேண்டும்.
பச்சை ரத்தினக்கல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்
எப்படி அணிய வேண்டும்?
ரத்தினவியல் படி, புதன் கிழமையன்று இந்த பச்சைக்கல் ரத்தினத்தை அணிவது நல்லதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்த ரத்தினம் புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த ரத்தினத்தை தங்கம் அல்லது வெள்ளி மோதிரம் அல்லது ஜெபமாலை போன்றவற்றில் போட்டு கழுத்தில் அணியலாம்.புதன் கிழமையில் இந்த கல்லை கழுத்தில் அல்லது மோதிர விரல் அல்லது கை சுண்டு விரலில் அணிய வேண்டும்.
மறந்தும் கூட இந்த பொருட்களை வீட்டில் வைக்காதீங்க.. எதிர்மறை ஆற்றலை கொண்டு வருமாம்..