இந்த 5 ராசிக்காரர்களுக்கு ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி

Published : Feb 10, 2025, 07:28 PM IST
இந்த 5 ராசிக்காரர்களுக்கு ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி

சுருக்கம்

பன்னிரெண்டு ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகள் மட்டும் துணிச்சலான, தைரியமான செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவர்கள். வாழ்க்கை எந்த ஒரு விஷயத்திலும் ரிஸ்க் எடுக்க கொஞ்சமும் தயங்க மாட்டார்கள். ராசிப்படி அவர்களின் இயற்கையான பண்பே அதுவாக இருக்கும். அப்படி எதிலும் ரிஸ்க் எடுக்க தயங்காமல் துணிந்து, முடிவுகளை எடுக்கும் தன்மை கொண்ட 5 ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் தைரியசாலிகளாக, எதையும் எதிர் கொள்லும் துணிச்சல் மிக்கவர்களாக இருப்பார்கள். தங்களின் மீதான அதீத நம்பிக்கை, துணிச்சல், உத்வேகத்தின் காரணமாக சவால்களை எதிர்களை தயங்க மாட்டார்கள். வேலை, உறவு, தனிப்பட்ட வாழ்க்கை என எதிலும் ரிஸ்க் எடுக்க கொஞ்சமும் தயங்க மாட்டார்கள் ஆனால் அப்படி துணிந்து எடுக்கும் முடிவுகள் இவர்களுக்கு பல நேரங்களில் வெற்றியை தரும்.  இது அவர்களை ரிஸ்க் எடுக்க மேலும் மேலும் தூண்டிக் கொண்டே இருக்கும். அப்படி வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிட மாதிரி என துணிந்து களமிறங்கும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான். இதில் உங்கள் ராசியும் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.

ரிஸ்க் எடுக்க தயங்காத ராசிக்காரர்கள் :

மேஷம் :

தைரியம், சாகசமான வேலைகளுக்கு பெயர் பெற்றவர்கள் மேஷ ராசிக்காரர்கள். மிகவும் சவாலான விஷயங்களை கையில் எடுத்து, அதை அசாட்டாக கையாண்டு, வெற்றியும் பெற்று, அடுத்தடுத்து முன்னேற கூடிய தன்மை கொண்டவர்கள் இவர்கள். இவர்களின் இயல்பான குணமே அது என்பதால் தைரியம், நம்பிக்கையான அணுமுறைகள் இவர்களின் செயல்களில் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்து விடும். இருந்தாலும் அசராமல், தங்களின் கொள்கையில் விடாப்படியாக இருந்து இலக்குகளை நம்பிக்கையுடன் போராடி அடைய தயங்காதவர்கள்.

சிம்மம் :

இயற்கையாகவே சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆபத்தை, சவால்களை எதிர்கொள்ளும் ஆர்வம் அதிகம். அவர்களின் தன்னம்பிக்கை, அசாத்திய ஆளுமை திறன் ஆகியவை இது போன்ற தைரிய முடிவுகள் எடுக்கவும், பயமின்றி துணிந்து ஒரு கை பார்க்கலாம் காரியங்களில் இறங்க வைக்கும். வெளியில் பார்ப்பதற்கு இவர்கள் பயந்து, தயங்குவது போல் தோன்றும். ஆனால் சூழ்நிலை சரியாக அமைந்து விட்டால் யோசிக்காமல் ரிஸ்க் எடுத்து விடுவார்கள். வாழ்க்கையை வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு வாழ்பவர்கள் என்பதால் எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள். இவர்களின் துணிச்சலான முடிவுகள் இலக்குகளை எட்டிப் பிடிக்க இவர்களை தூண்டிக் கொண்டே இருக்கும்.

தனுசு :

சாகசமான விஷயங்களில், புதுவிதமான விஷயங்களை முயற்சி செய்து பார்க்கவும் விரும்புபவர்கள் தனுசு ராசிக்காரர்கள். அதனால் இயற்கையாகவே அவர்களும் ரிஸ்க் எடுப்பது மிகவும் பிடிக்கும். எப்போதும் ஏதாவது சவால்களுக்கான வாய்ப்புகள் தேடி, அதன் மூலம் புதிய அனுபவங்களை பெறவும் விரும்புவார்கள். அவர்களின் நம்பிக்கை, இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற விடாமுயற்சி, உத்வேகம், ஆளுமை தன்மை ஆகியவை இவர்களுக்கு கை கொடுத்து, வாழ்க்கையில் முன்னேற வைக்கும். வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும். வெற்றி பெற வேண்டும் என விரும்பக் கூடியவர்கள். இதனால் அவற்றின் மீதான ஆர்வம் காரணமாக அதிகம் ரிஸ்க் எடுப்பார்கள். 

மிதுனம் :

ஆர்வம், துணிச்சலான செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள் மிதுன ராசிக்காரர்கள். சாதாரணமாகவே இவர்கள் ரிஸ்கான விஷயங்களை அதிகம் விரும்பக் கூடியவர்கள். இவர்களின் புத்திசாலித்தனம், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம், புதிய சிந்தனைகள் இவர்களை ரிஸ்கான விஷயங்களை முயற்சி செய்து பார்த்தால் என்ன என்ற ஆர்வத்தை தூண்டிக் கொண்டே இருக்கும். சூழ்நிலைகள் மாறுவதற்கு ஏற்ப, அதற்கு தகுந்தாற் போல் தங்களை மாற்றிக் கொண்டு, எப்படியாவது இலக்கை அடைந்து, தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள். எதையும் விரைவாக சிந்திக்கக் கூடிய திறன் கொண்டவர்கள் என்பதால் சவால்களை உற்சாகமான வாய்ப்பாக எடுத்துக் கொண்டு எதிர்கொள்ளக் கூடியவர்கள்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் வழக்கத்திற்கு மாறாக சுதந்திரமாக செயல்பட நினைப்பவர்கள். யாருக்கும் கட்டுப்பாடாமல் துணிந்து செயலாற்ற நினைப்பதால் சவால்களை எளிதாக கையாள்வார்கள். இவர்களுக்குள் இருக்கும் மனிதாபிமான குணம், சரியான நோக்கத்திற்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மற்றவர்களுக்காக துணிந்து ஏதாவது காரியத்தை செய்ய சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கும். புதுமையான, முன்னோக்கிய சிந்தனை கொண்டவர்கள் என்பதால் மற்றவர்கள் சவாலாக நினைக்கும் விஷயங்களை இவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டு செயலாற்றுவார்கள். புதுமை குறித்த இவர்களின் தேடல்களும் ரிஸ்க் எடுக்க  இவர்களை தூண்டிக் கொண்டே இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!