தை கிருத்திகையின் சிறப்புகளும் முருகனை வழிபடும் முறையும்!

Published : Feb 06, 2025, 03:26 PM ISTUpdated : Feb 06, 2025, 03:44 PM IST
தை கிருத்திகையின் சிறப்புகளும் முருகனை வழிபடும் முறையும்!

சுருக்கம்

தை கிருத்திகை தினத்தின் சிறப்புகளும், அன்றைய தினம் முருகனை வழிபடும் முறைகளை குறித்தும் இந்த பதிவில் காணலாம்.

தை கிருத்திகையின் சிறப்புகள் 

உலகெல்லாம் உள்ள தமிழர்களின்  விருப்ப தெய்வமாக முருகர் இருக்கிறார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. தை மாதப்பிறப்பை பொங்கல் பண்டிகையாக தமிழர்கள் அனைவரும் பொங்கலிட்டு சிறப்பாக வரவேற்கிறோம். தை மாத‌த்தில் தைப்பூசம், தை அமாவாசை, தை வெள்ளி, தை கிருத்திகை போன்ற  வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தை மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகபெருமானை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம்.

கார்த்திகை பெண்கள்

உலகுக்கே அம்மை யப்பனான சிவபெருமானுக்கும் உமையாளுக்கும் மகனாக பிறந்த முருகரை ஆறு கார்த்திகைப் பெண்கள் அன்போடும் பாசத்தோடும் கவனித்துக் கொண்டனர். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வகையில் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் வரும் கார்த்திகை தினங்கள் 3 தினங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.அவை, தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த 3 கார்த்திகை தினங்களும் முருகனுக்கு உகந்த தினங்களாக விஷேஷமாக கொண்டாடப்படுகிறது. 

காவடி வழிபாடு

விரதம் இருந்து மனமுருக வேண்டினால், அன்று நம் பிரார்த்தனைக ளுக்கு கார்த்திகேயன் கண்டிப்பாக செவி மடுப்பான் என்பது நிச்சயம். தை மாத கிருத்திகைக்கு பலரும் 48 நாட்கள் விரதமிருந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளும், அலகு குத்துதல், பாதயாத்திரை என பல வேண்டுதல்களை முருகனை நினைத்து செய்வார்கள். முருகனின் அறுபடை வீடுகளில் தை கிருத்திகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். தை கிருத்திகையையொட்டி கொடியேற்றி திருவிழாக்கள் நடைபெறும். 
 
தமிழ் வருடப்பிறப்பானது சித்திரை மாதம் தொடங்குகிறது. பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமான ‘தை’ மாதத்தில் பிள்ளைச் செல்வம் பெற வேண்டி பெண்கள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்;  கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தனை வணங்க கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முருகனை வழிபடும் முறை

தை கிருத்திகையன்று வீடுகளில் உள்ள முருகர் படத்திற்கு சந்தன, குங்குமம் இட்டு, மலர் சூட்டி, முருகனுடைய திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் ஆகிய மந்திர பாடல்களை பாடி முருகனை வழிபட வேண்டும். ஆறு விதமான பூக்களைக் கொண்டு முருகனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. முருகனுக்கு மிகவும் பிடித்த திணை புட்டு செய்து நைவேத்தியம் செய்து, சூடம் ஏற்றி, தீப, ஆராதனைகள் காண்பித்து வழிபட வேண்டும். இந்த நாளில் விரதமிருந்து முருகனை வணங்குவது விசேஷமாகக் கருதப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!