Sept 29-Oct 5 This Week Rasi Palan: மீன ராசி நேயர்களே.! இந்த வாரம் பூர்வீக சொத்துக்கள் கைக்கு வருமாம்.! ரெடியா இருங்க.!

Published : Sep 28, 2025, 05:08 PM IST
meena rasi this week rasi palan

சுருக்கம்

This Week Rasi Palan: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

மீன ராசி நேயர்களே இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டு இருந்த வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் வீட்டில் மங்களகரமான சூழல் நிலவும். உங்கள் நலம் விரும்பகளின் ஆலோசனை உங்களுக்கு பெரிய அளவில் உதவும். உங்களின் கனவுகள் மற்றும் நீண்ட நாள் ஆசைகள் இந்த வாரத்தில் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் கௌரவம், ஆற்றல் அதிகரிக்கும்.

ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் இன்று இந்த வாரம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். முன்பு இருந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு இந்த வாரம் தீர்வு கிடைக்கும். அதிக வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படலாம். எனவே போதிய ஓய்வு எடுப்பது அவசியம்.

நிதி நிலைமை:

நிதி நிலைமை இந்த வாரம் சீராக இருக்கும். பழைய முதலீடுகள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மூதாதையர்களின் சொத்துக்கள் கிடைப்பதற்கான அல்லது அது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத செலவுகள் வர வாய்ப்பு உள்ளதால் வரவு செலவுகளை சரியாக நிர்வகிக்க வேண்டும்.

கல்வி:

மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கும். படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உயர்கல்விக்காக முயற்சிக்கும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முயற்சிகளில் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது.

தொழில் மற்றும் வியாபாரம்:

வேலை செய்து வருபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். விரும்பிய இடத்தில் பணி மாறுதல், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் 2 மடங்காக கிடைக்கும். இருப்பினும் தொழில் எதிரிகள், போட்டியாளர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தினருடன் இணக்கமான சூழல் நிலவும். அவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் முழு அன்பும், ஆதரவும் கிடைக்கும். பெரியவர்கள் குடும்ப பிரச்சினைகளில் தலையிட்டு சமூக தீர்வு காண்பார்கள். பெரியவர்களின் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும்.

பரிகாரம்:

  • தடைகளில் இருந்து நிவாரணம் பெற காலையில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
  • குருபகவான் வழிபாடு நன்மைகளைத் தரும்.
  • திங்கட்கிழமை சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
  • அரச மரத்திற்கு நீர் ஊற்றி வழிபடுவது நிதி நிலையை மேம்படுத்தும்.
  • கோயிலில் இருக்கும் யாசகர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Astrology: வாழ்க்கையில் திடீர் திருப்பம் வேண்டுமா? கிரகங்களை சாந்தப்படுத்தும் ஆன்மிக ரகசியங்கள் இதோ!
Astrology: புத்தாண்டில் பொங்கு சனியால் அடிக்க போகுது அதிர்ஷ்டம் .! 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.!