Weekly Rasi Palan: மீன ராசி நேயர்களே.. இந்த வாரம் கஷ்டம் மேல் கஷ்டம் வரும்.! ஆனாலும் ட்விஸ்ட் இருக்கு

Published : Sep 21, 2025, 02:54 PM IST
Meena Rasi weekly rasi palan

சுருக்கம்

Meena rasi weekly rasi palan: மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இந்த வாரம் சனிபகவான் உங்கள் ராசியின் முதல் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு பழைய நோய்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும். எனவே இந்த வாரத்தை கவனத்துடன் கடக்க வேண்டியது அவசியம். இருப்பினும் வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சிகள் பலன் தரும்.

நிதி நிலைமை:

குருபகவான் உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் அமர்ந்திருப்பதாலும், கிரக நிலைகளைப் பொறுத்தும் நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பான பலன்களைப் பெறலாம். சமூகத்தில் உங்கள் நிலையை வலுப்படுத்துவதற்கும், உங்கள் செல்வத்தை அதிகரிப்பதற்கும் பல வாய்ப்புகள் திறக்கப்பட உள்ளன. உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கவனத்துடன் கையாள வேண்டும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். உறவினர்களிடையே இருந்த சிறு சிறு மனக்கசப்புகள் நீங்கி நல்லுறவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப நண்பர்களில் ஒருவர் உங்கள் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக நீங்கள் குடும்பத்தினர் மீது கோபத்தை வெளிப்படுத்தலாம். எனவே பொறுமை காக்க வேண்டியது அவசியம்.

தொழில்:

சொந்தமாக தொழில் நடத்தி வருபவர்கள், வணிகத்தில் ஈடுபடுபவர்கள், வேலையில் பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் துறையில் முன்னேற பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க உள்ளது. புதிய பொறுப்புகள் அல்லது திட்டங்கள் உங்களைத் தேடி வரும். சில வேலைகளில் எதிர்பாராத தாமதம் ஏற்படலாம். எனவே பொறுமையுடன் கையாள்வது அவசியம். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதால் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த சரியான நேரமாகும்.

கல்வி:

மாணவர்களை பொறுத்தவரை கடந்த காலங்களை விட இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டி இருக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறாமல் போகலாம். இதன் காரணமாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து உங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். எனவே கவனத்துடன் இந்த காலகட்டத்தை கடக்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இருந்த போதிலும் சிறிய உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். முன்பு கூறியது போல வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றை செய்வது நல்லது.

பரிகாரம்:

இந்த வாரம் குரு பகவானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க ஹயக்ரீவரை வழிபட வேண்டும். ஹயக்ரீவ மூர்த்திக்கு ஏலக்காய் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சிவ வழிபாடும் நன்மைகளைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!