
கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ராகு உங்கள் ராசியின் லக்ன வீட்டில் அமர்வதால் உங்களுக்கு மன அழுத்தங்கள் மற்றும் மகிழ்ச்சியை கெடுக்கக்கூடிய சில காரியங்கள் நடக்கலாம். இதன் காரணமாக உங்கள் வேலை பாதிக்கப்பட்டு உங்கள் இலக்குகளில் இருந்து திசை திரும்ப நேரிடலாம். இருப்பினும் உங்கள் மன உறுதி மற்றும் தன்னம்பிக்கையால் இந்த கடினமான காலத்தை கடந்து நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள்.
ராகுவால் ஏற்படும் விளைவுகள் ஒருபுறம் இருந்தாலும், உங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த லாபத்தை நீங்கள் சரியான முறையில் செலவிடுவீர்கள். நிலம் அல்லது சொத்து தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அவை சரி செய்யப்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியை காண்பீர்கள். நிலம் அல்லது சொத்துக்கள் சரியான விலைக்கு விற்கப்பட்டு, பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் வாரிசுகளுக்கு சென்று சேரும்.
இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சண்டைகள், மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களான உறவு வலுப்படும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
உங்கள் ஜாதகத்தின் ஐந்தாவது வீட்டில் குருபகவான் இருப்பதால் இந்த வாரம் தொழில் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் நல்ல உறவை மேம்படுத்துவீர்கள். இதன் காரணமாக உங்களுக்கு வெற்றி கிடைக்கலாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இருந்த பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். இருப்பினும் நீங்கள் முன்பை விட கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் இந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பாடங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கவும். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.
இந்த வாரம் ஆரோக்கியத்தில் சிறிது சுணக்கம் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, போதுமான ஓய்வு எடுப்பது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். அவ்வபோது உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. மன அழுத்தத்தை குறைக்க யோகா அல்லது தியானம் செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
எதிர்மறை ஆற்றல்களில் இருந்து விலக விஷ்ணு பகவானை வழிபடுங்கள். விஷ்ணுவுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்து, துளசி மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)