Weekly Rasi Palan: தனுசு ராசி நேயர்களே.. இந்த வாரம் குருவின் அருளால் உங்க கஷ்டம் எல்லாம் விலகப் போகுது.!

Published : Sep 21, 2025, 12:58 PM IST
dhanusu rasi weekly rasi palan

சுருக்கம்

Dhanusu Rasi Weekly rasi palan: தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

இந்த வாரம் கிரகங்களின் நிலை காரணமாக உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒன்பதாவது வீட்டில் கேது இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். சிறிய கவனக் குறைவும் உங்களுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தேவையற்ற மன குழப்பங்கள், மன அழுத்தங்கள் ஆகியவை ஏற்படலாம். இருப்பினும் உங்களின் தன்னம்பிக்கையான செயல்களால் எதிர்வரும் தடைகள் அனைத்தையும் முறியடிப்பீர்கள்.

நிதி நிலைமை:

குருபகவான் உங்கள் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமை சீராக இருக்கும். வருமானத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பு ஏற்படும். செலவுகள் குறையும். உங்கள் வசதியை மேம்படுத்துவதற்காக சிறிது பணத்தை செலவழிப்பீர்கள். வரவுக்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கு முன்னரும் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து அதன் பின்னர் எடுக்க வேண்டும். ஏனெனில் நிதி சார்ந்த விஷயங்களில் உங்கள் சொந்த முடிவு சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

குடும்ப உறவுகள்:

குடும்ப உறவுகளில் இந்த வாரம் நல்லிணக்கம் ஏற்படும். வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் சொல் பேச்சை கேட்டு நடப்பார்கள். இதன் காரணமாக குடும்பத்தினர் மத்தியில் மட்டுமல்லாமல், சமூகத்திலும் உங்கள் அந்தஸ்து உயரும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளவும். பெரியவர்களின் ஆலோசனைப்படி நடக்கவும். குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணையிடம் நெருக்கம் ஏற்படும். இதன் காரணமாக மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தொழில்:

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் தொழில் ரீதியாக சில பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் இத்தகைய பயணங்களை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் மன அழுத்தத்துடன், நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும் பொழுது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் அல்லது பிற முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

கல்வி:

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு இந்த வாரம் திடீர் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இலக்கில் கவனம் செலுத்தி, விடாமுயற்சியுடன் உழைப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் உங்கள் நேரத்தை வீணடிப்பவர்களிடம் விலகியே இருங்கள்.

பரிகாரம்:

“ஓம் பிருஹஸ்பதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 33 முறை உச்சரிக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது, பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது போன்றவை நேர்மறை பலன்களைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!