
இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு பல முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளது. உங்களின் கடின உழைப்புக்கான பலன்கள் இந்த வாரம் வெளிப்படத் துவங்கும். உங்கள் இலக்குகளை அடைய சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு, மற்றவர்களை காட்டிலும் முன்னேறிச் செல்வீர்கள். தொழில் முன்னேற்றம், நிதி நிலைமை, குடும்ப உறவுகள், கல்வி, உடல் ஆரோக்கியம் என இந்த வாரம் அனைத்தும் மேம்படும்.
குரு உங்கள் ஆறாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் இந்த காலக்கட்டத்தில் நிதி ரீதியாக வலிமையாக உணர்வீர்கள். உங்கள் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஏதேனும் கடன் வாங்கி இருந்தால் அதை திருப்பி செலுத்துவீர்கள். பரம்பரை சொத்துக்கள் நிலுவையில் இருந்த பணங்கள் ஆகியவை உங்கள் கைக்கு வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் வாரிசுகளை வந்தடையலாம்.
நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தால் இந்த வாரம் சாதகமான சூழல் ஏற்படும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். உங்கள் துணையின் ஆதரவு புதிய பலத்தை அளிக்கும். நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இந்த வாரம் பல சிறப்பு வாய்ந்த யோகங்கள் உருவாவதால் மகர ராசிக்காரர்கள் வேலையில் முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் வழக்கத்தை விட கூடுதல் முயற்சிகள் மேற்கொண்டால் எடுக்கும் அனைத்து காரியமும் வெற்றி பெறும். சிறு தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். உங்கள் தொழிலை பிற இடங்களுக்கோ அல்லது பெரிய அளவிற்கு விரிவாக்கமோ செய்யும் வாய்ப்புகள் உண்டு. தொழிற் கடனுக்காக விண்ணப்பித்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரலாம்.
மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான சூழல் இல்லை. கவனச் சிதறல்கள் அதிகம் ஏற்படலாம். சரியான திசையில் செயல்படுவதன் மூலம் வெற்றிகளை பெற முடியும். புதிய நுட்பங்களை கற்றுக்கொண்டு படிப்பில் பயன்படுத்தினால் மற்றவர்களை விட முன்னேற முடியும். நுழைவுத் தேர்வு அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் புதிய நுட்பங்களை பின்பற்றி படைப்புத்திறனை அதிகரிக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சிறு உடல்நல குறைபாடுகளை அலட்சியம் செய்ய வேண்டாம். வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக நீங்கள் பணம் செலவழிக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, போதுமான அளவு தூங்குவது, உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தை குறைக்க தியானம் அல்லது யோகா செய்வது ஆகியவை உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு அனுமன் வழிபாடு செய்யலாம். சிவாலயங்களுக்கு சென்று வில்வ இலைகளால் அர்ச்சித்து பூஜை செய்யலாம். வாயில்லா ஜீவன்கள், பறவைகளுக்கு உணவு அல்லது தண்ணீர் வழங்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அல்லது பிற உதவிகளை செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)