ராகு கேது பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் காரிய அனுகூலங்கள் கிடைக்கும். மன உறுதி அதிகரிக்கும். செல்வம் சேரும், புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பண உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பணிச்சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்கள் மகிழ்ச்சியை அளிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தி அடைவீர்கள். திட்டமிட்ட படி செயலை முடித்து வெற்றி காண்பீர்கள்.
திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களை பொறுத்தவை அவர்கள் மனதில் தைரியம் அதிகரிக்கும். கலைத்துறையினர் தொழில் ரீதியான நெருக்கடிகளை சந்திக்கக்கூடும் புது ஒப்பந்தங்கள் தொடர்பான சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக இருக்கலாம்.
அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை பசியின்மை பிரச்சனை ஏற்படலாம். இந்த ராகு கேது பெயர்ச்சியில் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் : கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
எனினும் பெரியவர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. உங்களின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு திருபதி தரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். பணவர திருப்திகரமாக இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
பரிகாரம் : முருகனை வணங்கினால் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.