இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். எனவே ராகு கேது பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பண வரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்துவந்த தாமதம் நீங்கும். எனினும் கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் நன்கு சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும், எதிர்பார்த்த லாபம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சல், பண விரயமும் ஏற்படும். இதனால் மனதில் வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அலுவலக பணிகளை அதிக கவனத்துடன் செய்ய வேண்டும்.
குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழல் இருக்காது. நிம்மதி குறையும் படியான சம்பவங்கள் ஏதேனும் நடக்கலாம். கனவன் – மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள், உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். பெண்கள் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் தீர ஆலோசனை செய்து செய்ய வேண்டும். கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும், வீண் வாக்க்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசியலில் இருப்பவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். பண வரவு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடல் சோர்வு மன சோர்வு ஏற்படலாம். அடுத்தவர்களின் யோசனையை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எல்லா பிரச்சனைகளும் தீரும். எதிர்ப்புகள் அகலும். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும்.
பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்கக் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனதின் தைரிய அதிகரிக்கும்.