நமக்கு கிடைக்கும் நேரத்தை முறையாக பயன்படுத்தினாலே போதும் நம் வாழ்க்கையில் மிக எளிதாக வெற்றி பெற்று விடலாம். அந்த வகையில் தங்களுக்கு கிடைக்கும் வெகு சில நேரத்தையும், சிறப்பாக பயன்படுத்தி முன்னேறும் 5 ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
பொதுவாகவே கடின உழைப்புக்கும் நேர்மையான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்றவர்கள் மகர ராசிக்காரர்கள். பிராக்டிக்களாக யோசிப்பவர்கள் மகர ராசிக்காரர்கள் ஆகவே நேரத்தின் முக்கியத்துவத்தை அதிகம் அறிந்தவர்களாக திகழ்கிறார்கள் மகர ராசிக்காரர்கள்.
கன்னி ராசிக்காரர்கள் ஒழுக்கமானவர்கள் எதையும் நேர்பட பேசும் செயல் திறன் கொண்டவர்கள். அவர்களுடைய புத்தி கூர்மையினால் பல இடங்களில் நற்பெயர் பெறுவார்கள். தங்களிடம் ஒப்படைக்கப்படும் ஒரு விஷயத்தை அர்ப்பணிப்புடன், குறித்த நேரத்தில் செய்து முடிக்க கூடிய சிறந்த ராசிக்காரர்கள் தான் கன்னி ராசிக்காரர்கள்.
உலகின் முதல் சிவன்கோயில்.. மரகத நடராஜர் சிலை பற்றிய சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?
எடுத்த விஷயத்தில் கவனம் செலுத்தி அதை முடிக்கும் வரை அதற்காக தீவிரமாக உழைக்கும் ராசிக்காரர்கள் தான் விருச்சிக ராசிக்காரர்கள். ஆற்றலும் வேகமும் தரக்கூடிய செவ்வாய் பகவானால் இவர்கள் ஆளப்படக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேரத்தை சரியாக பயன்படுத்துவதிலும், தனிப்பட்ட வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்டி முன்னேறும் ராசிக்காரர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்.
கும்ப ராசிக்காரர்கள் எதிலும் புதுமையை செலுத்தும் ஆற்றில் கொண்டவர்கள், தனித்துவமாக சிந்திப்பவர்கள் என்றும் இவர்களை கூறலாம். தாங்கள் திட்டமிடும் விஷயத்தை சரியாக செயல்படுத்தி அதில் வெற்றி காணும் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் நேரத்தையும் சிறப்பாக செலவிடுவதில் சிறந்தவர்கள் ஆகிறார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக தங்கள் நினைத்ததை நல்ல முறையில் நடத்தி முடிக்கும் யோகக்காரர்கள். அதீத புத்தி கூர்மை கொண்டவர்கள், தனித்து செயல்படும் ஆற்றலும், எதையும் விரைவில் புரிந்துகொள்ளும் திறனும் கொண்டவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இவர்களும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் முறையாக பயன்படுத்தி தங்கள் வாழ்வில் உச்சத்தை அடைபவர்கள் ஆவார்கள்.
உடம்பை பாடாய் படுத்தும் அக்னி தோஷம்: வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பரிகாரம் இதுதான்!