9-ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலங்கள் எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நியூமராலஜியில் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு தனித்துவம் உண்டு. அந்த வகையில் –ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 9,18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 9-ம் எண்ணில் பிறந்தவர்கள் ஆவர்கள் 9-ம் எண்னின் அதிபதி செவ்வாய் பகவான். எனவே இந்த எண்னில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் இருப்பார்கள். எண் கணிதத்தில் அதிக வல்லமை மற்றும் சக்தி கொண்ட எண்ணாக 9 கருதப்படுகிறது. எனவே 9-ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலங்கள் எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
9-ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலிலும் போராடி வெற்றி பெறக்கூடியவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட இவர்களின் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். இவர்களின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று அதிகமாக இருக்கும். சண்டை, போர்க்களம் போன்ற இடங்களில் இந்த எண்ணில் பிறந்தவர்களை பார்க்க முடியும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் இவர்கள் அதிகாரமிக்கவர்களாக இருப்பார்கள். காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளில் இவர்களுக்கு விருப்பம் இருக்கும். துணிவே துணை என்று செயல்படும் இவர்களுக்கு முன்கோபமும், படபடப்பும் இருக்கும்.
அதுமட்டுமின்றி மற்றவர்களை விட கோபம், தன்மானம், சுயமரியாதை இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். எந்த பதவியில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுவார்கள். அரசு, தனியார் வேலை என எதுவாக இருந்தாலும் 9-ம் எண்ணில் பிறந்தவர்கள் தலைமை பதவியில் இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் உள்ள சூட்சமத்தை எளிதில் அடையாளம் காணும் இவர்கள், கடின உழைப்பாளிகளாக இருப்பர். எதற்கும் கட்டுப்படாத இவர்கள் பாசத்திற்கும் அன்புக்கும் மட்டுமே கட்டுப்பாடுவார்கள்.
குடும்ப வாழ்க்கை
தாங்கள் சொல்வதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதும் இவர்களின் குணத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் எழக்கூடும். தான் தான் உயர்ந்தவன் என்றும், எல்லோரும் தங்களை மதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள்.
இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்பத்தில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன் பிறந்தவர்கள் மேல் இவர்களுக்கு அதிக பாசம் இருக்கும்.. 3, 6, 9 ஆகிய எண்களை கொண்டவர்களுடன் இவர்களுக்கு நல்ல நட்பு இருக்கும். 9-ம் எண்ணில் பிறந்த பெண்களுக்கு கீர்த்தியும், செல்வாக்கும், தொழில் வளம் கொண்ட ஆண் கணவனாக அமைவார். இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தொழில் சார்ந்த நல்ல முன்னேற்றமும் வெற்றியும் அடைவார்கள். குடும்ப வாழ்க்கையில் முதலில் பலவித துன்பங்கள் இருந்தாலும் பின்னர் புரிதல் ஏற்பட்டு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை இருக்கும். இவர்களின் முன் கோபத்தினால் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படும்.
தொழில் அல்லது வேலை
நேர்மையான செயல்பாடு மற்றும் வழிமுறைகள் மூலம் இவர்கள் மேற்கொள்ளும் தொழில்கள் யாவும் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். சினிமா, நாடகம், பத்திரிகை, ரேடியோ, தொலைக்காட்சி போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்:. வாழை, மொச்சை, சிவப்பு தானியம் போன்ற பொருட்களின் உற்பத்தி, உரம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தச்சு வேலை வெற்றியை தரும்.
கஷ்டங்களை நீக்கும் வெற்றிலை பரிகாரம்.. எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
உடல் ஆரோக்கியம்
வெங்காயம், பூண்டு, புளிச்சக்கீரை, மிளகு, இஞ்சி, சேப்பக்கிழங்கு, வெண்டைக்காய் மற்றும் பல வகையான பழங்கள் 9-ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். நீங்கள் தர்பூசணி, இளநீர், மோர் போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த எண் ஆதிக்கம் கொண்டவர்கள் பலருக்கு ரத்த அழுத்த நோய் இருக்கும். குடற்புண், அம்மை, நெருப்பு காயம், கண்ணில் உஷ்ணம் போன்ற பிரச்சனைகளும் எழலாம். எனினும் அவசரம், பிடிவாதம், சுயநலம் ஆகியவற்றை விட்டுவிட்டால் 9-ம் எண்னில் பிறந்தவர்கள் பெரும் சாதனைகளிஅ படைக்கலாம்.