எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வதிற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றிலை என்பது தாம்பூல தட்டில் வைக்கும் ஒரு பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் வீட்டில் விசேஷ நாட்களில் சாமி கும்பிடும் போது, அல்லது விழாக்களில் சாப்பாடு சாப்பிட்ட பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடும் சிலருக்கு இருக்கும். மேலும் செரிமானத்தை மேம்படுத்துவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச குடலை தூண்டுகிறது என வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
இப்படிப்பட்ட வெற்றிலைக்கு ஆன்மீகத்திலும் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. வெற்றிலையை மாலையாக கோர்த்து அனுமனுக்கு சூட்டுவதை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் வெற்றிலையைக் கொண்டு பாரிகாரம் செய்யலாம் என்பது தெரியாத ஒரு விஷயம். ஆம். நம் ராசிகளுக்கு ஏற்ப வெற்றிலையை பயன்படுத்தி பரிகாரம் நமது கஷ்டம் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வதிற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேஷம் :
வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கும்.
ரிஷபம் :
வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டால் துன்பம் விலகி இன்பம் சேரும்.
மிதுனம் :
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் விலகி, மகிழ்ச்சி உண்டாகும்
கடகம் :
வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.
சிம்மம் :
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.
கன்னி :
வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.
துலாம் :
வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் தீரும்.
விருச்சிகம் :
வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துயரம் தீரும்.
தனுசு :
வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலை நீங்கும்.
மகரம் :
வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் துக்கம் தொலையும்.
தீபாவளி முதல் இந்த 3 ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்.. பண மழை கொட்டப் போகுது.. !
கும்பம் :
வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலைகள் நீங்கி, நிம்மதி கிடைக்கும்.
மீனம் :
வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் நோய்கள் அனைத்தும் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.